LOADING...
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மீது பரபரப்பு குற்றசாட்டு வைக்கும் விஷால்
நடிகர் விஷால் ரெட் ஜெயண்ட் நிறுவனம் செய்யும் அடாவடி வேலைகளை பற்றி பேசியுள்ளார்

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மீது பரபரப்பு குற்றசாட்டு வைக்கும் விஷால்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 16, 2024
11:55 am

செய்தி முன்னோட்டம்

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருவது பலரும் அறிந்த ரகசியம். பல படங்கள் அவர்களின் ஒப்புதலுக்கு பிறகுதான் ரிலீஸிற்கே வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஷால் ஒரு தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ரெட் ஜெயண்ட் நிறுவனம் செய்யும் அடாவடி வேலைகளை பற்றி பேசியுள்ளார். அந்த நிறுவனத்தால், தான் பாதிப்படைந்தது பற்றியும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். விஷாலின் திரைப்படங்கள் சமீபகாலமாக தொடர் சிக்கல்களை சந்தித்து வருகிறது. அவரின் கடைசி ரிலீசான 'மார்க் ஆண்டனி'யும் கடைசி நிமிடம் வரை சட்டச்சிக்கலை சந்தித்தது. ஒருவழியாக படம் வெளியாகி அமோக வெற்றி பெற்றது. ஆனால், இதன் பின்னால் என்ன நடந்தது என்பதை குறித்து தற்போது மனம்திறந்துள்ளார் விஷால்.

விஷால்

"பட வெளியீடை தள்ளி வைக்கவேண்டும் என சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை"

நடிகர் விஷால் பேசியதன்படி,"ரெட் ஜெயண்டில் எனக்கு ஒரு நபர் மீது மனஸ்தாபம் உள்ளது. ஒரு படத்தை தள்ளிப்போ என சொல்வதற்கு யாருக்குமே அதிகாரம் கிடையாது. யாரும் சினிமாவை சொந்தம் கொண்டாட முடியாது. தமிழ் சினிமா என் கைல இருக்குனு சொல்லி யாரும் உருப்பட்டதா சரித்திரமே கிடையாது". "என் தயாரிப்பாளர் வட்டி கட்டுபவர். சும்மா ஏசி ரூம்ல உட்கார்ந்து கொண்டு, ஒரு போனை போட்டு தியேட்டர் போடு, படத்தை ரிலீஸ் பண்ணு, வேற எந்த படமும் வரக்கூடாது. அப்படினு சொல்ற தயாரிப்பாளர் கிடையாது. வட்டிக்கு வாங்கி, வேர்வை சிந்தி, நாங்கெல்லாம் ரத்தம் சிந்தி, ஒரு படத்தை எடுத்து கொண்டுவந்தா, தள்ளி வாங்கனு நீங்க சொன்னா, யாரு உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது?".

ரெட் ஜெயண்ட்

"அவரை உள்ளே சேர்த்து விட்டதே நான் தான்" 

"தமிழ் சினிமாவை நீங்க தான் குத்தகைக்கு எடுத்திருக்கீங்களானு அங்குள்ள ஒரு நபர் கிட்ட கேட்டேன். அந்த நபரை உதயிடம் சேர்ந்துவிட்டதே நான் தான். அவரே இந்த மாதிரி விஷயங்களை பண்ணும்போது என்னால் ஜீரணிக்க முடியவில்லை" "என்னுடைய தயாரிப்பாளரை இந்த தேதில படத்த ரிலீஸ் பண்ண சொல்றதுக்கு நீங்க யாரு முதல்ல?..நான் எதிர்த்ததால் தான் படம் சொன்ன டைம்ல ரிலீஸ் ஆகி வெற்றி அடைஞ்சது. அன்னைக்கு நான் சும்மா இருந்திருந்தால் படம் ரிலீஸ் ஆகி இருக்காது. இப்போ ரத்னம் படத்துக்கு கூட பிரச்சனை வரும். கண்டிப்பா வேணும்னே வந்து வேட்டு வைப்பாங்க" என நடிகர் விஷால் ஆவேசத்துடன் பேசியுள்ளார்.

Advertisement

embed

நடிகர் விஷால் ஆவேசம்

Cinema mafia by RedGiant pictures exposed by Vishal!! #Vishal #RedGiant pic.twitter.com/wVksnleUVz— ThatIndianGuy.. (@krishnaitsmyn) April 15, 2024

Advertisement