Page Loader
வைரல் வீடியோ: 'புட்ட பொம்மா' பாடலுக்கு நடனமாடிய நடிகர் விஜய் 
இதை முன்னிட்டு பல திரை பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

வைரல் வீடியோ: 'புட்ட பொம்மா' பாடலுக்கு நடனமாடிய நடிகர் விஜய் 

எழுதியவர் Sindhuja SM
Jun 23, 2023
06:24 pm

செய்தி முன்னோட்டம்

'தளபதி விஜய்' என்று அன்போடு அழைக்கபடும் நடிகர் விஜய் நேற்று(ஜூன்-22) தனது 49வது பிறந்தநாளை கொண்டாடினார். இதை முன்னிட்டு பல திரை பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அது மட்டுமல்லாமல், விஜய் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் 'லியோ' திரைப்படத்தின் முதல் பாடலும் ஃபரஸ்ட் லுக் போஸ்டரும் நேற்று வெளியிடப்பட்டது. இந்த சந்தோசத்தில் இருந்து ரசிகர்கள் மீழ்வதற்குள், நடிகர் விஜய்யின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த வீடியோவை நடிகை பூஜா-ஹெக்டே வெளியிட்டிருக்கிறார். நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வெளியாயிடப்பட்டிருக்கும் இந்த வீடியோவில், அவர் குழந்தைகளுடன் க்யூடாக பிரபல 'புட்ட பொம்மா' பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இந்த வீடியோ 'பீஸ்ட்' படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

வைரலாகும் நடிகர் விஜய்யின் வீடியோ