அரசியல் பயணத்திற்கு இடையே தனிப்பட்ட வாழ்வில் இடி! நடிகர் விஜய் - சங்கீதா விவாகரத்து?
செய்தி முன்னோட்டம்
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சங்கீதா தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் நடிகர் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்ததாக தெரியவந்ததை தொடர்ந்து, தாம் இந்த விவாகரத்து முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த உறவை விஜய் தொடர்ந்த காரணத்தினாலேயே தாங்கள் கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
திருமண வாழ்க்கை
காதலில் இணைந்த திருமணம் கசந்ததா?
இலங்கை தமிழ் பெண்ணான சங்கீதாவை, கடந்த 1999-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் விஜய். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சுமார் 27 ஆண்டுகால திருமண வாழ்வை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தற்போது சங்கீதா சட்டப்பூர்வ நடவடிக்கையை எடுத்துள்ளார். இந்த விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி நடிகர் விஜய் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. விஜய் தற்போது முழுநேர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வரும் வேளையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த இந்த செய்தி அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.