Page Loader
கனடாவில் வாணவேடிக்கை காட்டிய நடிகர் விஜயின் தி கோட்; வைரலாகும் காணொளி
தி கோட் திரைப்படம்

கனடாவில் வாணவேடிக்கை காட்டிய நடிகர் விஜயின் தி கோட்; வைரலாகும் காணொளி

எழுதியவர் Sekar Chinnappan
Sep 02, 2024
02:48 pm

செய்தி முன்னோட்டம்

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) வெளியாக உள்ள தி கோட் திரைப்படத்திற்காக படக்குழு ஆகாயத்தில் புரமோஷன் செய்துள்ள காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் தி கோட் திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டைன்மெண்ட் தயாரித்துள்ள நிலையில், படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், கனடாவில் ஸ்கை டைவிங் குழுவினர் மூலம் ஆகாயத்தில் படத்தின் போஸ்டரை பறக்கவிட்டு, படக்குழுவினர் புரமோஷன் செய்துள்ளனர். இந்த காணொளி ரசிகர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

தி கோட் படத்தை புரமோட் செய்த ஸ்கை டைவிங் குழு