NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் நடிகர் விஜய் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் நடிகர் விஜய் 

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் நடிகர் விஜய் 

    எழுதியவர் Srinath r
    Dec 30, 2023
    02:39 pm

    செய்தி முன்னோட்டம்

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நடிகர் விஜய், பாளையங்கோட்டையில் நிவாரண உதவிகளை வழங்கினார்.

    இம்மாதம், 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழை, அப்பகுதிகளை புரட்டிப் போட்டது.

    வெள்ள பாதிப்பில் இருந்து, அந்த மாவட்டங்கள் மெல்ல மீண்டு வரும் நிலையில், அந்த மக்களுக்கு பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் விஜய் பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட மக்களுக்கு, அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பை வழங்கி வருகிறார்.

    2nd card

    வீடுகளை இழந்தவர்களுக்கு ₹25,000 நிதி உதவி

    நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில், வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட மொத்தம் 1,500 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை நடிகர் விஜய் வழங்க உள்ளார்.

    இதற்காக, தூத்துக்குடியில் இருந்து 400 நபர்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் நெல்லைக்கு அழைத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    மின்சாரம் தாக்கி உயிரிழந்த ராபின்சன் என்பவரது குடும்பத்திற்கு, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ₹1 லட்சம் நிவாரண நிதியையும் விஜய் வழங்குகிறார்.

    மேலும் கனமழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு, ₹25,000 நிவாரண உதவியும் நடிகர் விஜய் வழங்குவார் என விஜய் மக்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

    நடிகர் விஜய் நெல்லை வந்ததை அறிந்து, விழா நடைபெறும் மண்டபத்தை சுற்றி ஏராளமான ரசிகர்கள் அவரை பார்ப்பதற்காக குவிந்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர் விஜய்
    விஜய்
    திருநெல்வேலி
    தூத்துக்குடி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    நடிகர் விஜய்

    லியோ காட்சிகள் ஆன்லைனில் வெளியானது- ரசிகர்கள் அதிர்ச்சி லியோ
    லியோ திரைப்படம் வெளியான திரையரங்கில் திருமணம்- புதுக்கோட்டையில் சுவாரசியம் விஜய்
    லியோவில் 'ஹெரால்டு தாஸ்' கதாபாத்திரத்தில் நடிக்க பிரித்திவிராஜ்-ஐ அணுகிய லோகேஷ் மலையாள படம்
    ஜப்பான் முதல் தி மார்வெல்ஸ் வரை- தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களின் தொகுப்பு நடிகர்

    விஜய்

    இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் லியோ
    'லியோ' திரைப்படம் நாளை ரிலீஸ் - பத்திரிகையாளர் சந்திப்பில் லோகேஷ் கனகராஜ் லோகேஷ் கனகராஜ்
    'லியோ' படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட விஷால்  லியோ
     LCU -வில் இணைந்த லியோ! லியோ

    திருநெல்வேலி

    பற்களை பிடுங்கிய விவகாரம் - சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 24 பேர் இடமாற்றம்  காவல்துறை
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - சிபிசிஐடி ரகசிய விசாரணை சிபிசிஐடி
    தாம்பரம்-செங்கோட்டை இடையேயான ரயில் வாரம் 3 முறை இயக்கப்படும்  சென்னை
    கொளுத்தும் வெயில்: நீர்மட்டம் குறைந்ததால், குடிநீருக்கு தவிக்கும் நெல்லை மக்கள்  தமிழ்நாடு செய்தி

    தூத்துக்குடி

    'ஆதனின் பொம்மை' நாவலினை எழுதியவருக்கு சாகித்ய பால புரஸ்கார் விருது  மத்திய அரசு
    தூத்துக்குடி பண்ணை பசுமை அங்காடியில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் தக்காளி தமிழக அரசு
    ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் - நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்  நிர்மலா சீதாராமன்
    பட்டியலின மாணவன் மீது தாக்குதல் நடத்திய மாற்று சமூகத்தினை சேர்ந்த மாணவர்கள் - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025