நடிகர் வடிவேலு என்னை ஆள் வைத்து அடித்தார் - காதல் சுகுமார் பேட்டி
1997ம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, பின்னர் 'காதல்' திரைப்படம் மூலம் காமெடியனாக பிரபலமானவர் காதல் சுகுமார். அதனைத்தொடர்ந்து, கலகலப்பு, வசூல் ராஜா எம்பிபிஎஸ், தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட பல படங்களின் நடித்த இவர் 'திருட்டு விசிடி' என்னும் படத்தினை இயக்கியும் உள்ளாராம். இதனிடையே இவர் அண்மையில் நடிகர் வடிவேலு தன்னை ஆள்வைத்து அடித்ததாக கூறி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார். இதன்படி அவர் கூறியதாவது, "கலகலப்பு படத்தில் வடிவேலு மாதிரி நடிக்க சொன்னார்கள். நான் முடியாது என்று மறுத்தேன். ஆனால் அதன்பின்னர், நானும் பொன்னம்பலமும் இணைந்து நடித்தோம்" என்று கூறியுள்ளார். அப்போது, வடிவேலு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாராம். அந்நிலையில் வடிவேலு பார்க்க வேண்டும் என்று கூறியதாக போண்டாமணியும், முத்துக்காளையும் சுகுமாரை அழைத்து சென்றுள்ளனர்.
கெஞ்சி கதறி தப்பியதாக வேதனை
அங்கு சென்ற பின்னர் வடிவேலு 'என்னை போலவே நடித்திருக்கிறாய்' என்று பாராட்டியுள்ளார். அதன் பின் போண்டாமணியும், முத்துக்காளையும் அறையினை விட்டு வெளியே சென்றுள்ளனர், அவர்கள் பின்னரே சுகுமாரும் வெளியேற முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரை தடுத்து நிறுத்திய வடிவேலு, 'என்னை போல் நடிப்பேன் என்று கூறி ஏன் பல கம்பெனிகளில் வாய்ப்பு கேட்டு ஏறி இறங்கி கொண்டிருக்கிறாய்?' என கேட்டாராம், அதற்கு சுகுமார், "அப்படியெல்லாம் நான் செய்யவில்லை. ஒரு வாய்ப்பு கிடைத்ததால் நடித்தேன். இனி உங்களை போல் நடிக்க மாட்டேன்" என்று கூறியுள்ளார். பேசி கொண்டிருக்கும் போதே, பின்பக்கம் இருந்து தன்னை சரமாரியாக சிலர் தாக்கியதாகவும், கெஞ்சி கதறி அவர்களிடம் தப்பி வந்ததாகவும் சுகுமார் வேதனை தெரிவித்துள்ளார்.