
நடிகை தாப்ஸி பண்ணு-காதலன் மத்தியாஸ் உடன் திருமணம் முடிவுற்றதாக தகவல்
செய்தி முன்னோட்டம்
நடிகை தாப்ஸி பண்ணு, தனது நீண்ட கால காதலரும் பேட்மிண்டன் வீரருமான மத்தியாஸ் போயை, மார்ச் 23 அன்று உதய்பூரில் திருமணம் செய்து கொண்டார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
நெருங்கிய குடும்பத்தினர் மட்டும் கலந்துகொண்ட இந்த திருமண நிகழ்வில், வெகுசில சினிமா பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
அதில் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், நடிகை கனிகா தில்லான் மற்றும் சிலர் அடங்குவர்.
திருமணத்திற்கு பிந்தைய விருந்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.
செய்திகளின்படி, நடிகை தாப்ஸி விரைவில் மும்பையில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில வாரங்களுக்கு முன்பு, இந்த ஜோடி சீக்கிய-கிறிஸ்தவ முறைப்படி திருமணத்தை நடத்தப் போவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ட்விட்டர் அஞ்சல்
நடிகை தாப்ஸிக்கு திருமணம்
Taapsee Pannu gets married to boyfriend Mathias Boe.#TaapseePannu @taapsee
— editorji (@editorji) March 25, 2024
Read more: https://t.co/Ic4vhO8EX4 pic.twitter.com/eBn15u8Gjq