உயிரிழந்த தன் ரசிகரின் குடும்பத்தினருக்கு, நடிகர் சூர்யா நேரில் ஆறுதல்
சாலை விபத்தில் உயிரிழந்த தன் ரசிகரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நடிகர் சூர்யா ஆறுதல் தெரிவித்துள்ளார். இதன் புகைப்படங்களும், வீடியோவும் தற்போது வைரலாகி வருகின்றன சென்னை எண்ணூரை சேர்ந்தவர் அரவிந்த். இவர் சமீபத்தில் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். உயிரிழந்த அரவிந்த், சூர்யா ரசிகர் மன்றத்தின் உறுப்பினராக இருந்துள்ளார். சூர்யாவின் பிறந்தநாளின் போது ரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்தவர்களில் இவரும் ஒருவர். இந்நிலையில் அரவிந்தின் மறைவு கேட்டு, நடிகர் சூர்யா அவரது வீட்டிற்கு நேரடியாக சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, மறைந்த அரவிந்தின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். நடிகர் சூர்யா தற்போது, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கும் 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.