LOADING...
சூர்யா 46 படப்பிடிப்பு துவங்கியது; மகளுடன் ஹைதராபாத்திற்கு சென்ற நடிகர் சூர்யா
சூர்யாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

சூர்யா 46 படப்பிடிப்பு துவங்கியது; மகளுடன் ஹைதராபாத்திற்கு சென்ற நடிகர் சூர்யா

எழுதியவர் Venkatalakshmi V
Jun 09, 2025
04:39 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் சூர்யா தனது அடுத்த படத்திற்கான பூஜையை முடித்துவிட்டு, அதன் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இதற்காக அவர் ஹைதராபாத்திற்கு தனது மகள் தியாவுடன் வந்திருந்தார். அதன் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. வெங்கி அட்லூரி இயக்கும் 'சூர்யா 46' என்ற படத்தில் சூர்யாவுடன் மமிதா பைஜூ நடிக்கிறார். முன்னதாக தியா, மும்பையில் தனது உயர்நிலைப் பள்ளிபடிப்பை முடித்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்திருந்தார் ஜோதிகா. பொதுவெளிகளில் அதிகம் காணப்படாத தியா, ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து தனது தந்தையுடன் வந்திருந்தது அவரது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

பட வரிசைகள்

சூர்யாவின் பட பணிகள் 

வேலை விஷயத்தில், சூர்யா கடைசியாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 'ரெட்ரோ' படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர் மற்றும் விது ஆகியோரும் நடித்திருந்தனர். ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்த 'ரெட்ரோ' உலகம் முழுவதும் ரூ. 80 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டது. 'ரெட்ரோ' படத்தை முடித்த பிறகு, இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்களுக்கு சூர்யா ஒப்புதல் அளித்துள்ளார். அவர் ஏற்கனவே ஆர்.ஜே. பாலாஜியுடன் ஒரு படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார், அதில் த்ரிஷாவும் நடிக்கிறார். இதற்கிடையில், வெங்கி அட்லூரியுடனான அவரது கூட்டணியில் உருவாகும் 'சூர்யா 46' படப்பிடிப்பும் இன்று துவங்கியுள்ளது. இந்தப் படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.