Loading...
'டோரதி' படத்தில் கொடூர வில்லனானது ஏன்? நடிகர் சவுந்தரராஜா பகிர்ந்த சுவாரஸ்யப் பின்னணி
டோரதி திரைப்படத்தில்நடித்ததற்கான காரணங்கள் மற்றும் அனுபவங்களை சவுந்தர ராஜா பகிர்ந்துள்ளார்.

'டோரதி' படத்தில் கொடூர வில்லனானது ஏன்? நடிகர் சவுந்தரராஜா பகிர்ந்த சுவாரஸ்யப் பின்னணி

எழுதியவர் Vasuki
Oct 10, 2026
05:50 pm

செய்தி முன்னோட்டம்

சுந்தரபாண்டியன், ஜிகர்தண்டா, கடைக்குட்டி சிங்கம், பிகில் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்துத் தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றவர் நடிகர் சவுந்தர ராஜா. இவர், அண்மையில் திரைக்கு வந்துள்ள டோரதி'திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கணவராகவும், அச்சுறுத்தும் கொடூரமான வில்லனாகவும் நடித்துப் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறார். இத்திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தைத் தேர்வு செய்து நடித்ததற்கான காரணங்கள் மற்றும் அனுபவங்கள் குறித்து அவர் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நெருங்கிய நண்பர்

கார்த்திக் சுப்புராஜ் அழைப்பும் கீர்த்தி சுரேஷ் ஜோடியும்

டோரதி படத்தில் நடித்த சூழல் குறித்துப் பேசிய சவுந்தர ராஜா, "இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்.

அவர் அழைத்து இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியதும் மறுயோசனையின்றி உடனடியாகச் சம்மதித்தேன்.

மதுரை பின்னணியில் நகரும் கதைக்களம் என்பதால் என்னை அழைத்திருப்பார் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன்.

ஆனால், தேசிய விருது பெற்ற முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று கூறியபோது முதலில் என்னால் நம்பவே முடியவில்லை.

பின்னர் அவருக்குக் கணவராக நடிக்க வேண்டும் என்பதை அறிந்ததும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.

கீர்த்தி சுரேஷ் ஒரு தேசிய விருது நாயகியாக இருந்தாலும் படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடமும் மிகவும் எளிமையாகவும் இயல்பாகவும் பழகினார்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

நடிக்க வாய்ப்பு

16 ஆண்டுகால சினிமா போராட்டம்

வில்லன் பாத்திரம் குறித்துப் பேசிய நடிகர் சவுந்தர ராஜா, "இது முழுமையான நெகட்டிவ் பாத்திரம் என்றாலும், நடிகனாகத் திறமையை வெளிப்படுத்தப் போதுமான களம் இருந்ததால் விரும்பி ஏற்றேன்.

படப்பிடிப்பில் காட்சிகளை மெருகேற்ற இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் வாய்ப்புகளைக் கேட்டுப் பெற்ற கூட்டு உழைப்பே இக்கதாபாத்திரம் பேசப்படக் காரணம்" என்றார்.

மேலும் தனது 16 ஆண்டுகால சினிமா போராட்டம் பற்றிக் கூறிய அவர், 45-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளதாகவும், தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனித்துவமான இடத்தை எட்டுவதே லட்சியம் என்றும், அதற்கான நிரந்தர அங்கீகாரம் விரைவில் கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

ADVERTISEMENT