மீண்டும் வெற்றிமாறனுடன் கதாநாயகனாக இணைகிறார் சூரி
காமெடி நடிகராக பல படங்களில் நடித்து வந்த சூரி முதன்முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் இதன் 2ம் பாகத்திலும் சூரி நடித்து முடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, நடிகர் சூரி மீண்டும் ஒரு புதுப்படத்தில் நாயகனாக நடிக்க கமிட்டாகியுள்ள நிலையில், அப்படத்தின் பூஜை இன்று(செப்.,11)கும்பகோணத்தில் நடைப்பெற்றது. 'எதிர்நீச்சல்', 'பட்டாசு', 'காக்கிசட்டை'போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் துரை செந்தில்குமார் இப்படத்தினை இயக்கவுள்ளார். படத்தின் கதையை வெற்றிமாறன் எழுதியுள்ளார். சசிகுமார், உன்னி முகுந்தன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு 'கருடன்' என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய படம் ஆரம்பம்
மீண்டும் வெற்றிமாறன் சூரி கூட்டணி ! | S PLEX TAMIL#Vetrimaaran #Soori #Sasikumar #UnniMukundan #karudan #SenthilKumar #splex #TamilCinemaNews #CineUpdate #splextamil pic.twitter.com/xf7HMxbmYS— S PLEX Tamil (@splextamil) September 11, 2023