Page Loader
பல விருதுகள் பெற தகுதியுள்ள படம் வாழை; நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு
வாழை திரைப்படத்திற்கு சிவகார்திகேயன் புகழாரம்

பல விருதுகள் பெற தகுதியுள்ள படம் வாழை; நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 24, 2024
06:05 pm

செய்தி முன்னோட்டம்

வாழை திரைப்படம் மிக நெருக்கமான ஒருவரின் கதையைக் கேட்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலரும் நடித்த வாழை திரைப்படம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) திரைக்கு வந்தது. டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் இணைந்து மாரி செல்வராஜ் மற்றும் திலீப் சுப்பராயன் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தமிழ் சினிமாவின் பல முன்னணி பிரபலங்களும் மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் படத்தை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.

விருது

வாழை திரைப்படம் குறித்து சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் வாழை படம் குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில், "மிக நெருக்கமான ஒருவரின் கதையை கேட்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. மாரி செல்வராஜ் மீண்டும் மீண்டும் தான் ஒரு strong-ஆன இயக்குனர் என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். 'வாழை' என்னுடைய favourite படமாக மாறியுள்ளது. பல விருதுகள் பெற தகுதியுள்ள படம் இந்த 'வாழை'." எனத் தெரிவித்துள்ளார். இதை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் மாரி செல்வராஜ், "பரியேறும் பெருமாள் வெளியாவதற்கு முன்பே என்னை நேசிக்க ஆரம்பித்த ஆன்மா நீங்கள்... கர்ணன் மாமன்னன் என்று என் ஒவ்வொரு படைப்பு வரும்போதும் முதல் ஆளாய் நீங்கள் என் கைபிடித்து கொண்டாடியதைப் போலவே வாழைக்கு நீங்கள் தந்திருக்கும் வார்த்தைகளையும் நல்ல தோழனாக பத்திரப்படுத்திகொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

சிவகார்த்திகேயன் பாராட்டு