மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மனைவி ஆர்த்தியுடன் சாமி தரிசனம் செய்தார் நடிகர் சிவகார்த்திகேயன்
செய்தி முன்னோட்டம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சிறப்புச் சாமி தரிசனம் மேற்கொண்டார். மீனாட்சியம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதிகளில் வழிபாடு நடத்திய அவர்கள், தொடர்ந்து மொட்டைக் கோபுர முனீஸ்வரரையும் வணங்கினர். பின்னர் கோவில் யானைக்குப் பழங்கள் வழங்கி ஆசி பெற்றனர். கோவிலுக்கு வந்திருந்த ஏராளமான ரசிகர்கள் சிவகார்த்திகேயனுடன் கைகுலுக்கி தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதோடு, ஆர்வத்துடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.
பெருமை
மதுரையின் மாப்பிள்ளை என்பதில் பெருமை
தரிசனத்தை முடித்துக் கொண்டு செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன், "மதுரை எனக்கு எப்போதுமே மிகவும் சிறப்பு வாய்ந்த ஊர்; சிறு வயதிலிருந்தே இங்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன்".
"எனது மனைவி ஆர்த்தி மதுரையைச் சேர்ந்தவர் என்பதால், மதுரையின் மாப்பிள்ளை என்று சொல்லிக் கொள்வதில் எனக்குக் கூடுதல் பெருமையும் எல்லையற்ற மகிழ்ச்சியும் கிடைக்கிறது".
"தீபாவளியை முன்னிட்டு மாமனார் மற்றும் மாமியார் வீட்டிற்கு வந்த நாங்கள், நேற்று பிள்ளையார்பட்டியிலும் இன்று மீனாட்சியம்மன் கோவிலிலும் சாமி தரிசனம் செய்தோம்" என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
தீபாவளி வாழ்த்து
சேயோன் படப்பிடிப்பு
தமது புதிய திரைப்படப் பணிகள் குறித்துப் பேசிய அவர், "'சேயோன்' திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக மதுரை வந்துள்ளேன். இதுவரை படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது."
"டிசம்பர் மாதம் வரை தென் மாவட்டங்களின் பல ஊர்களில் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவுள்ளது" எனத் தெரிவித்தார்.
மேலும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் பொதுமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், "குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர்கள் உடனிருந்து மிகவும் கவனமாகவும் பாதுகாப்புடனும் வெடிக்க வைக்க வேண்டும்" என்று பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்தார்.