Page Loader
4 ஆண்டுக்கு பின் வெளிவரும் நடிகர் சித்தார்த்தின் டக்கர் படம்! டீசர் வெளியீடு
நடிகர் சித்தார்த்தின் டக்கர் படம் மே 26 இல் வெளியாக உள்ளது

4 ஆண்டுக்கு பின் வெளிவரும் நடிகர் சித்தார்த்தின் டக்கர் படம்! டீசர் வெளியீடு

எழுதியவர் Siranjeevi
Apr 19, 2023
11:29 am

செய்தி முன்னோட்டம்

கோலிவுட் சினிமாவில் கடந்த 2003-ஆம் ஆண்டில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தான் சித்தார்த். அந்த படத்தில் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தார். அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள சித்தார்த் கடைசியாக 2019 ஆம் ஆண்டில் அருவம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தெலுங்கு படமான மகா சமுத்திரம் என்ற படம் வெளியானது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக சித்தார்த்தின் படம் தமிழ் சினிமாவில் வெளியாக நிலையில், கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் டக்கர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில் மே 26, 2023 அன்று உலகம் முழுவதும் இந்த படம் திரைக்கு வரும் என தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post