Page Loader
அடுத்து வாரம் திருமணம்..கார் விபத்தில் சிக்கிய 'எங்கேயும் எப்போதும்' நடிகர் 
கார் விபத்தில் சிக்கிய 'எங்கேயும் எப்போதும்' நடிகர்

அடுத்து வாரம் திருமணம்..கார் விபத்தில் சிக்கிய 'எங்கேயும் எப்போதும்' நடிகர் 

எழுதியவர் Venkatalakshmi V
May 29, 2023
11:30 am

செய்தி முன்னோட்டம்

தமிழில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'எங்கேயும் எப்போதும்'. இந்த திரைப்படத்தில், ஜெய், அஞ்சலி, அனன்யா மற்றும் ஷர்வானந்த் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் ஷர்வானந்த். இவர் தெலுங்கு படவுலகில் பிரபலமான நடிகர். சமீபத்தில் கூட, சித்தார்த், அதிதி ராவ் ஆகியோருடன் 'மகா சமுத்திரம்' என்ற படத்திலும், நடிகை அமலாவுடன், 'கணம்' என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். இவருக்கும், ஹைதெராபாத்தை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வரும் ஜூன் 3-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நேற்று(மே 28), ஷர்வானந்த் கார் விபத்தில் சிக்கியுள்ளார். லேசான காயங்களுடன் தப்பிய சர்வானந்தை, பொதுமக்கள் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

விபத்து குறித்து ஷர்வானந்த் ட்வீட்