Page Loader
நடிகர் சந்தானத்தின் புதிய படத்தின் பெயர் வெளியானது
நடிகர் சந்தானத்தின் புதிய படத்தின் பெயர் குறித்த தகவல்

நடிகர் சந்தானத்தின் புதிய படத்தின் பெயர் வெளியானது

எழுதியவர் Nivetha P
Oct 18, 2023
07:42 pm

செய்தி முன்னோட்டம்

சமீபத்தில் சந்தானம் நடித்து வெளியான திரைப்படம் 'டிடி ரிட்டர்ன்ஸ்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப்பெற்றது. இதனைத்தொடர்ந்து சந்தானத்தின் நடிப்பில் 'வடக்குப்பட்டி ராமசாமி' என்னும் படமும் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சந்தானம், கல்யாண் இயக்கத்தில் ஓர் புதிய படத்தில் நடித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக சன் டிவி 'பூவே உனக்காக' சீரியலில் நடிக்கும் ப்ரீத்தி ராதிகா நடித்து வருகிறார். '80ஸ் பில்டப்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், கிங்ஸ்லி, முனீஸ்காந்த், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

பர்ஸ்ட் லுக் போஸ்டர்