கர்ப்பமாக இருக்கும் சமந்தா; வைரலாகும் 'மா இண்டி பங்காரம்' கொண்டாட்ட வீடியோ
செய்தி முன்னோட்டம்
பிரபல நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் அவரது கணவரும் பிரபல இயக்குனருமான ராஜ் நிடிமோரு ஆகிய இருவருக்கும் தங்களின் முதல் குழந்தை பிறக்கப்போகிறது என்ற மகிழ்ச்சியான செய்தி தற்பொழுது வெளியாகியுள்ளது. சமந்தா தற்பொழுது கர்ப்பமாக இருப்பதை அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன. 39 வயதாகும் சமந்தா, இந்த ஆண்டின் இறுதிக்குள் தனது முதல் குழந்தையைப் பெற்றெடுக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. சமந்தா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் 'மா இண்டி பங்காரம்' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போதுதான் இந்த செய்தி முதன்முதலில் கசிந்தது. படக்குழுவினருடன் சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு இணைந்து கேக் வெட்டிய வீடியோவில் சமந்தாவின் தோற்றத்தைக் கவனித்த ரசிகர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதை யூகித்தனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
சமந்தாவுக்கு கேக் ஊட்டிய கணவர் ரசிகர்கள் 🥹🥰😍💝 pic.twitter.com/req9B5kkqC
— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) June 20, 2026
வீடியோ
திருப்பதி கோவில் வீடியோவும் வைரல்
படம் ரிலீஸாவதற்கு முன்பு, சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு படக்குழுவினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். தரிசனம் முடிந்து வெளியே வந்த போது, அங்கு திரண்டிருந்த ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்காமல் சமந்தாவை இயக்குனர் ராஜ் நிடிமோரு மிகவும் பத்திரமாகத் தனது கைகளால் அரவணைத்து அழைத்துச் சென்ற வீடியோவும் இணையத்தில் வைரலானது. எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை வெளியில் காட்டிக்கொள்ளாத ராஜ் நிடிமோரு, சமந்தா மீது காட்டிய இந்த அதீத அக்கறை ரசிகர்களை நெகிழ வைத்தது.
வாழ்க்கை
காதல் முதல் திருமணம் வரை
'தி ஃபேமிலி மேன் 2' மற்றும் 'சிட்டாடல்: ஹனி பன்னி' போன்ற தொடர்களில் இணைந்து பணியாற்றியதன் மூலம் இவர்களிடையே நட்பு மலர்ந்தது. 2023-ம் ஆண்டு முதல் காதலித்து வந்த இவர்கள், கடந்த 2025 டிசம்பர் 1 அன்று கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மிக எளிமையான முறையில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி 6 மாதங்களே ஆகியுள்ள நிலையில், சமந்தா தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி புதிய வாழ்க்கையை நோக்கி நகர்வதோடு, தற்பொழுது தாயாகப் போகும் செய்தியும் அவரது ரசிகர்களைப் பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.