நடிகர் ஆர்.கே சுரேஷ் வங்கி கணக்கை முடக்கிய குற்றப்பிரிவு போலீசார்!
ஆருத்ரா மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே சுரேஷின் வங்கி கணக்கை காவல்துறை முடக்கியுள்ளனர். சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆருத்ரா கோல்டு, முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என ஒரு லட்சம் பேரிடம் இருந்து ரூ.2,438 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, நிர்வாக இயக்குநர்கள் 21 பேர் மீது குற்றப்பிரிவு வழக்குபதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணையில் நடிகர் மற்றும் பாஜக ஓபிசி பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் தலைமறைவான ஆர்.கே. சுரேஷின் வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர்.