 
                                                                                தனது 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் லோகோவை வெளியிட்டார் நடிகர் ரவி மோகன்
செய்தி முன்னோட்டம்
நடிகர் ரவி மோகன், சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் நிறுவப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமாக லோகோவை நேற்று வெளியிட்டார். இந்த செய்தியை அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் அறிவித்தார். ரவி மோகன் கடைசியாக 'காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்தார்'. அவரது வரவிருக்கும் படம் ஜென்னி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கணேஷ் கே பாபு இயக்கும் கராத்தே பாபு மற்றும் சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி ஆகிய இரண்டு படங்களிலும் அவர் தீவிரமாக பணியாற்றி வருகிறார். ரவி மோகன் ஸ்டுடியோஸ் முதல் தயாரிப்பில் டிக்கிலோனா மற்றும் வடக்குபட்டி ராமசாமி படங்களுக்கு பெயர் பெற்ற கார்த்திக் யோகி இயக்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிப்பு
தயாரிக்கும் படத்தில் நடிப்பு
தான் தயாரிக்கும் முதல் படத்தில் ரவி மோகன் முக்கிய வேடத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது. இது தவிர யோகி பாபுவை வைத்து அவர் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இதற்கிடையே, தனிப்பட்ட வாழ்க்கையில்,தனது மனைவி ஆர்த்தி ரவியை பிரிந்து வாழும் நடிகர் ரவி மோகன் விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தை அணுகியுள்ளார். மேலும், பாடகி கெனிஷாவுடன் பொது இடங்களில் தோன்றியதன் மூலம் சமீபத்தில் கவனத்தை ஈர்த்தார். இந்த ஜோடி சமீபத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிரபலமான பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் மற்றும் குன்றக்குடி முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்குச் சென்றது ஆன்லைனில் விவாதங்களைத் தூண்டியது குறிப்பிடத்தக்கது.