அடுத்த செய்திக் கட்டுரை

ஆஸ்கர் அகாடமியில் நடிகர்கள் கிளையில் ராம்சரணுக்கு இடம்
எழுதியவர்
Srinath r
Nov 02, 2023
03:40 pm
செய்தி முன்னோட்டம்
தெலுங்கு நடிகரும், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனுமான நடிகர் ராம் சரணுக்கு ஆஸ்கர் அகாடமியின் நடிகர்கள் கிளையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் விருது வழங்கும் ஆஸ்கர் அகாடமியில், நடிகர் கிளையில் ஒரு உறுப்பினர் பதவியை ராம்சரண் பெற்றுள்ளார்.
பல்வேறு வெளிநாட்டு நடிகர்களுக்கும் இப்பொறுப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவிலிருந்து ராம் சரணுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விழாவில், எஸ் எஸ் ராஜமாணி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல், சிறந்த ஒரிஜினல் பாடல் என்று பிரிவில் 95வது ஆஸ்கர் விருதை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.