தீபாவளி அன்று நடிகர் ராம்சரண்-உபாசனா வெளியிட மகிழ்ச்சியான செய்தி
செய்தி முன்னோட்டம்
தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர் ராம்சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா இருவரும் இரண்டாவது குழந்தையை எதிர்நோக்குவதாக இன்று அறிவித்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் உபாசனா வெளியிட்ட ஒரு பதிவில் இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் வெளியிட்டுள்ளார். தீபாவளி அன்று நடைபெற்ற ஒரு நெருக்கமான குடும்ப விழாவின் புகைப்படங்களையும் அவர் உடன் பகிர்ந்திருந்தார். அவரது பதிவில் "தீபாவளி காலத்தில் "Double the love and double the blessings" என்ற தலைப்பிட்டு இருந்தார். இந்த செய்தி சமூக ஊடகத்தில் வைரலாகியிருக்கிறது. இருவருக்கும் முதல் மகள் க்ளின் காரா 2023-ம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி பிறந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
This Diwali was all about double the celebration, double the love & double the blessings.
— Upasana Konidela (@upasanakonidela) October 23, 2025
🙏🙏 pic.twitter.com/YuSYmL82dd
விவரங்கள்
மற்ற விவரங்கள்
ராம் சரண் மற்றும் உபாசனா கடந்த 2012-ல் திருமணம் செய்து கொண்டனர். தொழிலதிபரும், அப்பல்லோ நிறுவனர் பிரதாப் ரெட்டியின் பேத்தியுமான உபாசனா பல நேர்காணல்களில் "சமூக அழுத்தத்துக்கு பலியாகாமல், நாங்கள் விரும்பும் நேரத்தில் பெற்றோராக முடிவு செய்தோம்" என்று தெரிவித்திருந்தார். அதற்காக தனது சினைமுட்டையை அவர் பாதுகாத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அதன் பின்னர், 2022 ஆம் ஆண்டு தாங்கள் பெற்றோர்கள் ஆனதை அறிவித்தார். தற்போது அவர் இரண்டாவது முறையாக தாய்மை அடைந்திருப்பது Mega குடும்பத்தில் (சிரஞ்சீவி குடும்பம்) பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இருவருக்கும் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களையும், புதிய உறுப்பினருக்கு ஆரோக்கியமான வருகைக்காக தங்களது ஆசீர்வாதங்களையும் தெரிவித்து வருகின்றனர்.