நடிகர் பிரபுதேவா நடிக்கும் படத்தின் பட குழுவினருக்கு இலங்கை பிரதமர் வாழ்த்து
செய்தி முன்னோட்டம்
நடிகர் பிரபுதேவா தற்போது அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கும் 'முசாசி' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இத்திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலின் படப்பிடிப்புக்காக பட குழு இலங்கை சென்று இருந்தது.
இந்நிலையில் இப்படக் குழுவினரை இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன அழைத்து வாழ்த்தி கௌரவித்த புகைப்படங்களை பட குழு வெளியிட்டுள்ளது.
'முசாசி' திரைப்படத்தில் பிரபுதேவா காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். வி டிவி கணேஷ், மாஸ்டர் மகேந்திரன், ஜான் விஜய், தங்கதுரை, மகேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
மாஸ் என்டர்டைனராக தயாராகும் இத்திரைப்படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. லியாண்டர் லீ மார்டி படத்திற்கு இசையமைக்கிறார்.
ட்விட்டர் அஞ்சல்
பிரபுதேவா படக்குழுவினருக்கு இலங்கையில் பாராட்டு
#Clicks | பிரபுதேவா நடிக்கும் படக்குழுவைப் பாராட்டிய இலங்கை பிரதமர்!#SunNews | #PrabhuDeva | @PDdancing pic.twitter.com/O3XGb90CSM
— Sun News (@sunnewstamil) September 29, 2023