
பிரபுதேவாவின் தம்பி வீட்டில் எழுந்த சர்ச்சை குறித்த முழு விவரம்
செய்தி முன்னோட்டம்
சென்னையில் நடிகர் பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத், வீட்டில் குத்தகைக்கு இருந்தவர்களை வெளியேற்றிவிட்டு, வீட்டை வெல்டிங் வைத்து பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த விக்னேஷ், தி.நகர் ஜெயமால் தெருவில், பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத் வீட்டில் குத்தகைக்கு வசித்து வருகிறார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு, விக்னேஷ் வீடு தேடிக் கொண்டிருந்தபோது, நடிகர் நாகேந்திர பிரசாத்தின் வீட்டை பார்த்து, அவரிடம் வீடு கேட்டுள்ளார்.
அதற்கு நாகேந்திர பிரசாத், அந்த வீட்டை ஒரு தனியார் நிறுவனத்திற்கு கேர் டேக்கிங்குக்கு கொடுத்து விட்டதாக கூறியுள்ளார்.
மேலும் அந்த தனியார் நிறுவனத்திற்கு, ₹25 லட்சம் குத்தகையாக செலுத்தி விட்டு, வீட்டில் தங்கிக் கொள்ளும் படியும் அறிவுறுத்தியுள்ளார்.
2nd card
காவல்துறையில் புகார் அளித்த விக்னேஷ்
அந்த நிறுவனத்திடம் இருந்து மாத வாடகையை, நாகேந்திர பிரசாத் தரப்பினர் வசூல் செய்து கொள்வதாக விக்னேஷ் இடம் தெரிவித்துள்ளனர்.
ஒரு வருடமாக நாகேந்திர பிரசாத்திற்கு மாத வாடகையாக ₹36,000 வழங்கி வந்த அந்த நிறுவனம், திடீரென வாடகை வழங்குவதை நிறுத்திவிட்டது.
வாடகை வராததால், வீட்டை விட்டு வெளியேறும்படி விக்னேஷுக்கு, நாகேந்திர பிரசாத் தரப்பினர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.
இதை அடுத்து நேற்று நாகேந்திர பிரசாத்தின் ஆட்கள், விக்னேஷ் குடும்பத்தினரை வெளியேற்றிவிட்டு, அவர் தங்கியிருந்த வீட்டிற்கு பூட்டு போட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் விக்னேஷ் புகார் அளித்தார்.
இந்நிலையில் நாகேந்திர பிரசாத் மற்றும் அவரது மனைவி முன்னிலையில், காவல்துறையினர் இன்று பூட்டை உடைத்து விக்னேஷை உள்ளே அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
3rd card
தனியார் நிறுவனத்திற்கும், நாகேந்திர பிரசாத்துக்கும் இருக்கும் தொடர்பு குறித்து போலீஸ் விசாரணை
மேலும் விக்னேஷ், தான் வழங்கிய ₹25 லட்சத்தை திருப்பி வழங்கினால், வீட்டை காலி செய்வதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் காவல்துறையினர் நாகேந்திர பிரசாத் மற்றும் விக்னேஷ் பணம் வழங்கிய தனியார் நிறுவனத்திற்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா, மோசடி ஈடுபட்டு தலைமறைவான நபர் எங்கே, நாகேந்திர பிரசாத்திற்கு அந்நிறுவனம் எவ்வளவு பணம் வழங்க வேண்டும் உள்ளிட்டவற்றை விசாரித்து வருகின்றனர்.
நேற்று நாகேந்திர பிரசாத்தின் ஆட்கள், வீட்டை பூட்டிய போது உள்ளே அவரது வளர்ப்பு நாய் சிக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.