Page Loader
இயக்குனர் மாருதியுடன் பிரபாஸின் அடுத்த படம்- பொங்கலுக்கு வெளியாகும் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்
பொங்கலுக்கு வெளியாகும் பிரபாஸின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு.

இயக்குனர் மாருதியுடன் பிரபாஸின் அடுத்த படம்- பொங்கலுக்கு வெளியாகும் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்

எழுதியவர் Srinath r
Dec 29, 2023
01:05 pm

செய்தி முன்னோட்டம்

பாகுபலி திரைப்படங்களின் வெற்றியின் மூலம் ஃபேன் இந்திய நாயகனாக உயர்ந்த பிரபாஸ், அண்மையில் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய சலார் பாகம் 1 திரைப்படத்தில் நடித்திருந்தார். படம் விமர்சன ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், உலகளவில் ₹500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், பிரபாஸ் தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 கி.பி என்ற பேண்டஸி ஆக்சன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், கமலஹாசன், அமிதாப்பச்சன் உள்ளிட்ட வரும் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

2nd card

வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் பிரபாஸ்

தற்போது, பிரபாஸ் தனது அடுத்த படத்திற்காக பக்கா கமர்சியல் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மாருத்தியுடன் கைகோர்த்துள்ளார். இதுவரை பிரபாஸ் நடிக்காத கதாபாத்திரத்தில், இப்படத்தில் நடிப்பதாக இயக்குனர் தெரிவித்துள்ள நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகை அன்று வெளியிடப்படுகிறது. பாகுபலி திரைப்படங்களுக்கு பின்னர், ராதே ஷியாம், சாஹு, ஆதிபுருஷ் ஆகிய திரைப்படங்களில் நடித்த பிரபாஸுக்கு, அவை அனைத்தும் நல்ல வெற்றியை பெற்று தரவில்லை. இதனால், ஏற்கனவே தன்னை வைத்து வெற்றி படம் இயக்கிய மாருதியுடன் இணைந்துள்ள பிரபாஸ், வெற்றிப் பாதைக்கு திரும்புவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

இயக்குனர் மாருதி வெளியிட்டுள்ள திரைப்படத்தின் போஸ்டர்