Loading...
திருமணம் செய்யவில்லை, லிவ்-இன் தான்: சின்னத்திரை நடிகையுடனான உறவு குறித்து மனம் திறந்த தொகுப்பாளர் ஆதவன்
சின்னத்திரை நடிகையுடனான உறவு குறித்து மனம் திறந்த தொகுப்பாளர் ஆதவன்

திருமணம் செய்யவில்லை, லிவ்-இன் தான்: சின்னத்திரை நடிகையுடனான உறவு குறித்து மனம் திறந்த தொகுப்பாளர் ஆதவன்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 10, 2026
01:19 pm

செய்தி முன்னோட்டம்

சின்னத்திரையில் தொகுப்பாளர், மிமிக்ரி கலைஞர் மற்றும் நடிகராக புகழ்பெற்ற ஆதவன், தானும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகை விசாலினியும் திருமணமின்றி 'லிவ்-இன்' உறவில் வாழ்ந்து வருவதாக அளித்துள்ள பேட்டி சமூக வலைதளங்களில் விவாத பொருளாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆதவன் மற்றும் விசாலினி ஆகிய இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாயின. ஆனால், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசிய ஆதவன், "நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை; மாறாக லிவ்-இன் உறவிலேயே வாழ்ந்து வருகிறோம். இதனை வெளிப்படையாகக் கூறுவதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

விவரங்கள்

'கொஞ்சம் நடிங்க பாஸ்' மூலம் புகழ்பெற்ற ஆதவன்

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கொஞ்சம் நடிங்க பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் ஆதவன்.

தொடர்ந்து பல்வேறு மேடை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துத் தனது பன்முக திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

வானொலி தொகுப்பாளராக தன் பயணத்தை தொடங்கிய விசாலினி, பல முன்னணித் திரைப்படங்களில் நடிகைகளுக்கு டப்பிங் கலைஞராகப் குரல் கொடுத்துள்ளார்.

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'காக்கிச் சட்டை', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' உள்ளிட்ட படங்கள் இதில் அடங்கும். தற்போது விஜய் தொலைக்காட்சியின் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரிலும் நடித்து வரும் இவர், இசைஞானி இளையராஜாவின் மைத்துனர் மகள் என்றும் கூறப்படுகிறது.

உறவு

ஒரே கூரையின் கீழ் குழந்தைகள்

ஆதவனுக்கு ஏற்கனவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம் விலாசினியோ, ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.

சில மாதங்களுக்கு முன்னரும் இதே போல வதந்தி கிளம்பிய நிலையில், விலாசினி அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

அதற்கு காரணம், அப்போது ஆதவனின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருந்ததாக கூறப்பட்டது.

தற்போது ஆதவன் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். ஆதவனின் நேர்காணலின்படி, தங்களது குழந்தைகள் தங்களோடுதான் ஒரே வீட்டில் வசசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சின்னத்திரை வட்டாரத்தில் இவர்களது திருமணம் குறித்துப் பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில், ஆதவனின் இந்த நேரடி விளக்கம் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT