
மணிகண்டன் நடிக்கும் 'லவ்வர்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது
செய்தி முன்னோட்டம்
நடிகர் மணிகண்டன் குட்நைட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்து நடிக்கும் லவ்வர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.
குட்நைட் திரைப்படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி என்டர்டைன்மென்ட் நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கிறது.
படத்தை பிரபுராம் வியாஸ் இயக்கும் நிலையில், சீன் ரோல்டன் இசையமைக்கிறார். மாடர்ன் லவ் சென்னை வெப் சீரிஸ் முதல் எபிசோடில் நடித்திருந்த ஸ்ரீ கௌரி பிரியா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
லவ்வர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் கட்சியில், மிகவும் குப்பையான, பாழடைந்த அறையில் மணிகண்டன், கையில் சிகரெட் உடன் காட்சியளிக்கிறார். மேலும், அவர் அருகில் உள்ள மேஜையிலும், அந்த அறையிலும் மதுபாட்டில்கள் உள்ளது.
இத்திரைப்படம், அடுத்த ஆண்டு காதலர் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
'லவ்வர்' படத்தின் பர்ஸ்ட் லுக் காட்சி
Your’s Truly !!
— Manikandan Kabali (@Manikabali87) November 30, 2023
It’s #Lover ❤️
Directed by @Vyaaaas
A @RSeanRoldan musical !!! pic.twitter.com/SUvzrIoH4L