அடுத்த செய்திக் கட்டுரை

நடிகர் கவினின் திருமண புகைப்படங்கள்: ரசிகர்கள் வாழ்த்து
எழுதியவர்
Sindhuja SM
Aug 20, 2023
04:01 pm
செய்தி முன்னோட்டம்
சின்னத்திரை நடிகராக இருந்து வெள்ளித்திரையில் களமிறங்கி கலக்கி கொண்டிருக்கும், நடிகர் கவின் தனது திருமண புகைப்படங்களை இன்று இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
'சரவணன் மீனாட்சி' என்ற தொலைக்காட்சி தொடரில் வேட்டையன் என்ற காதாபாத்திரத்தில் அறிமுகமான நடிகர் கவின், 'லிஃப்ட்', 'டாடா' என 2 திரைப்படங்களில் இதுவரை நடித்திருக்கிறார்.
இந்த இரண்டு திரைப்படங்களுமே விமர்சன ரீதியாக பெரும் வெற்றி பெற்றது.
அதிலும், 'டாடா' வசூல் ரீதியாகவும் வெற்றி அடைந்து, தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.
இந்நிலையில், நடிகர் கவினுக்கும் அவரது நீண்ட நாள் காதலி மோனிகாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.
அவர் தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.