Page Loader
அப்பாவை போலவே மகனும் மிகவும் எளிமையானவர்: ஜேசன் சஞ்சய் குறித்து கவின்
கவின் நடிப்பில் தற்போது ஸ்டார் படம் வெளியாகவுள்ளது

அப்பாவை போலவே மகனும் மிகவும் எளிமையானவர்: ஜேசன் சஞ்சய் குறித்து கவின்

எழுதியவர் Venkatalakshmi V
May 03, 2024
04:54 pm

செய்தி முன்னோட்டம்

விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கப்போவதாக ஒரு அறிவிப்பு வெளியானது. கடந்த ஆண்டு வெளியான அந்த அறிவிப்பிற்கு பின்னர், இப்படத்தில் கவின் நடிப்பதாக கூறப்பட்டது. அதன் பின்னர் இப்படத்தை பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் நடிகர் கவின் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,"ஆமா ஜேசன் சஞ்சய் அவருடைய படத்துக்காக என்னை அணுகியது உண்மைதான். அப்போது என்னுடைய கைவசம் உள்ள படங்கள் பற்றி கூறினேன். அதையடுத்து தாங்கள் கலந்துரையாடிவிட்டு வருவதாக சொன்னார்கள். ஆனால் அதன்பின்னர் அவர்களிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. நான் பார்த்தவரை விஜய்யை போலவே அவரது மகன் ஜேசன் சஞ்சய்யும் மிகவும் எளிமையானவராக இருந்தார்" எனக்கூறினார்.

embed

ஜேசன் சஞ்சய் குறித்து கவின்

#WATCH | நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் குறித்து புதிய அப்டேட் கொடுத்த நடிகர் கவின்#SunNews | #Kavin | #JasonSanjay | @Kavin_m_0431 | @actorvijay pic.twitter.com/VwHNVCtTlz— Sun News (@sunnewstamil) May 3, 2024