Page Loader
மகனுடன் கார் ரேசிங்கில் ஈடுபட்ட நடிகர் அஜித்: வீடியோ
மகனுடன் கார் ரேசிங்கில் ஈடுபட்ட நடிகர் அஜித்

மகனுடன் கார் ரேசிங்கில் ஈடுபட்ட நடிகர் அஜித்: வீடியோ

எழுதியவர் Venkatalakshmi V
Apr 04, 2025
09:45 am

செய்தி முன்னோட்டம்

நடிகர் அஜித் தற்போது சிறிய பிரேக் எடுத்துக்கொண்டு சென்னை திரும்பியுள்ளார். தற்போது அவர் குடும்பத்தினருடன் நேரம் செலவழித்து வருகிறார். இந்த நிலையில், சென்னையில் உள்ள ஒரு கோ-கார்டிங் அரங்கில் தனது மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் ஆகியோருடன் அவர் கார்டிங்கில் ஈடுபட்ட புகைப்படங்களும், வீடியோவும் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில், அஜித், மகன் ஆத்விக் உடன் கார் ரேசிங்கில் ஈடுபடுவதையும், அதோடு அவருக்கு சில குறிப்புக்கள் வழங்குவதையும் காணலாம். நடிகர் அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்த படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இன்று இரவு முதல் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post