பெற்றோர்களை விட்டுட்டு, தனியாக வாழ்வது என்னால் முடியாது: அபிஷேக் பச்சன்
செய்தி முன்னோட்டம்
பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப் பச்சனின் மகன், அபிஷேக் பச்சன்.
ஆரம்ப காலத்தில் அபிஷேக் நடித்த பல படங்கள் தோல்வியில் முடிந்தன. போதாக்குறைக்கு, அவர் 'ஸ்டார்கிட்' என முத்திரை குத்தப்பட்டார்.
அதன் பின்னர் படங்களை பொறுமையாக தேர்வு செய்து நடிக்க தொடங்கினார்.
அதோடு, கால் பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் அணிகளை வாங்கி, அதில் கவனம் செலுத்த துவங்கினார்.
இந்த நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு, இயக்குனர் பால்கி இயக்கத்தில் வெளியாகியுள்ள 'கூமர்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் அபிஷேக்.
இயக்குனர் பால்கி ஏற்கனவே, பா, ஷமிதாப் போன்ற கிளாசிக் படங்களை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்த போது அபிஷேக் பச்சனிடம், கூட்டு குடும்பமாக வாழ்வது குறித்து கேட்கப்பட்டது.
card 2
"கூட்டுக் குடும்பம் என்பது இந்திய கலாசாரத்தின் ஓர் அங்கம்"
அந்த கேள்விக்கு பதிலளித்த அபிஷேக், "சமூகம், கலாசாரம், மரபுகள் என அனைத்தும் மாறி வருகின்றன. அதற்கேற்றபடி நாமும் மாறுகிறோம். ஆனால், என் பெற்றோரை விட்டு விட்டு தனியாக வாழ்வதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. குறிப்பாக அவர்களது இப்போதைய வயதை கணக்கில் கொள்ளும்போது. என் அப்பாவுக்கு 84. என் அம்மாவுக்கு 75 " எனக்கூறினார்.
தொடர்ந்து, "நம்மால் நம்மை கவனித்துக் கொள்ள முடியாத பருவத்தில், அவர்கள் நம்மை பராமரித்தது போல, அவர்களுக்கும் நாம் இருக்க வேண்டும். கூட்டுக் குடும்பம் என்பது இந்திய கலாசாரத்தின் ஓர் அங்கம். என்னுடைய 47 வயதிலும் நான் எனது பெற்றோர் இருவருடனும் மகிழ்ச்சியாக இருப்பது என்னுடைய அதிர்ஷ்டம்" என்று அபிஷேக் பச்சன் கூறினார்.