
திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்"
செய்தி முன்னோட்டம்
நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி இடையே நடைபெற்று வரும் திருமணத் தகராறில், ஆர்த்தி ரவி தற்போது தனது 'இறுதி விளக்கத்தை' வெளியிட்டுள்ளார்.
இன்று இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட ஒரு நீண்ட பதிவில், தங்களது பிரிவுக்குப் பணமோ அதிகாரமோ காரணமல்ல என்றும், 'மூன்றாவது நபரே' காரணம் என அவர் நேரடியாகக் கூறியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதட்டம் போலவே, இந்த விவகாரமும் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில், ரவி மோகன் தனது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இருவரும் மாறி மாறி குற்றம்சாட்டி அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர்.
விமர்சனம்
"இடையில் அந்த மூன்றாவது வெளி நபர்" - ஆர்த்தி ரவியின் கடுமையான விமர்சனம்
"பணமோ அதிகாரமோ காரணமல்ல. எங்களது வாழ்க்கையில் நுழைந்த மூன்றாவது நபரே எங்களைப் பிரித்தார்" என ஆர்த்தி ரவி குறிப்பிடும் இந்த அறிக்கையில், அவர் வலியுறுத்தியது என்னவெனில், "தங்கள் திருமணத்தை சீரழித்தது இருவருக்குள் இருந்த பிரச்சனைகள் அல்ல; வெளியிலிருந்து வந்த ஒரு மூன்றாம் நபர்"
விவாகரத்துக்கு முன்பே அந்த நபர் தங்கள் வாழ்வில் நுழைந்ததாகவும், போதுமான ஆதாரங்களோடும் இதை கூறுவதாகவும் அவர் தெரிவித்தார். *
தன்னை "கட்டுப்படுத்தும் மனைவி" என்ற குற்றச்சாட்டு சுமத்தியதைக் கண்டித்து, "என் கணவரை தீய வழிகளில் இருந்து காப்பாற்றியது என் குற்றமா?" என கேள்வி எழுப்பினார்.
திட்டமிட்ட நடவடிக்கை
"வீட்டைவிட்டு வெறுங்கையோடு போகவில்லை- திட்டமிட்ட வெளியேறும் நடவடிக்கை"
ரவி மோகன் தனது அறிக்கையில், அவர் வீட்டை விட்டு வெறுங்கையோடு வெளியேற்றப்பட்டதாக கூறுவதை ஆர்த்தி மறுத்துள்ளார்.
"ஐந்து கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் காரில், தேவையான எல்லாம் எடுத்துவிட்டு அவர் திட்டமிட்டு வெளியேறினார் சென்றார்" என தெரிவித்துள்ளார். தனது பிள்ளைகள் தந்தையை சந்திக்க மிகவும் விரும்புகின்றனர் ஆனால் பாதுகாப்பான இடங்களில் மட்டுமே சந்திக்க விருப்பம் தெரிவிக்கிறார்கள் என கூறியுள்ளார்.
தன்னை 'துன்புறுத்திய மனைவி' என சித்தரிக்க முயற்சிப்பது உண்மைக்கு புறம்பானது என்றும், பிள்ளைகளைத் தந்தையிடமிருந்து அகற்றி வைத்ததாக கூறப்படுவது உண்மையல்ல என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
"இனி பேச எதுவுமில்லை. நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறட்டும். எனக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்" என தனது அறிக்கையை முடித்துள்ளார்.