டைகர் ஷெராப் மீதான தாக்குதல் வழக்கு: அமீர் கானை முதலில் தாக்க திட்டமிட்டதாக விசாரணையில் தகவல்
செய்தி முன்னோட்டம்
பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதற்கு முன்பாக, பிரபல முன்னணி நடிகர் அமீர் கானை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த திடுக்கிடும் தகவல் காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த வாரம் மும்பை ஜூகு பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் இருந்து காரில் புறப்பட்ட போது டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்திற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றிருந்தது. இவ்வழக்கில் 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறுவன் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிடிபட்டவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் இந்த அதிர்ச்சித் தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
பின்னணி
அமீர் கானைக் குறிவைத்த கும்பல்
தாக்குதல் நடத்திய கும்பல் தொடக்கத்தில் நடிகர் அமீர் கானைத் தங்களது பிரதான இலக்காகக் கொண்டு முழு ஏற்பாடுகளையும் செய்திருந்தது.
இதற்காக ஒரு மாதத்திற்கும் மேலாக மும்பையில் முகாமிட்டு அவரது அன்றாட நடமாட்டங்களைக் கண்காணித்த அக்கும்பல், மூன்று முறை அவரது வீட்டின் அருகே வரை சென்றும் நோட்டமிட்டுள்ளது.
அமீர் கான் படப்பிடிப்புக்காக அடிக்கடி வெளியூர் சென்றதாலும், வீட்டிலேயே தங்கியிருந்ததாலும் அவரை நெருங்குவது அக்கும்பலுக்குச் சவாலாக அமைந்தது.
அதேநேரம், பொது மைதானத்தில் கால்பந்து விளையாடும் வழக்கத்தைக் கொண்டிருந்த டைகர் ஷெராப் எளிதான இலக்காக அமைந்தார்.
இதனால் அவரைத் தாக்கியதாகத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.