LOADING...
அல்லு அர்ஜுன்- இயக்குநர் அட்லீயின் பிரம்மாண்ட படத்தில் இணைந்தார் மிருணாள் தாக்கூர்
மிருணாள் தாக்கூர் 'AA22xA6' படப்பிடிப்பில் இணைந்துள்ளார்

அல்லு அர்ஜுன்- இயக்குநர் அட்லீயின் பிரம்மாண்ட படத்தில் இணைந்தார் மிருணாள் தாக்கூர்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 27, 2025
05:52 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குநர் அட்லீ, நடிகர் அல்லு அர்ஜுன் இணையும் மிகப்பிரமாண்டமான பான்-இந்தியா திரைப்படமான 'AA22xA6'-இல் பிரபல நடிகை மிருணாள் தாக்கூர் முக்கிய வேடத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தும் செய்திகள் வெளியாகியுள்ளன. Lets Cinema வெளியிட்டுள்ள ட்வீட் படி, மிருணாள் தாக்கூர் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். 'சீதா ராமம்', 'ஹாய் நானா' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மிருணாள் தாக்கூர், அட்லீயின் இந்தச் சயின்ஸ் ஃபிக்‌ஷன் (Sci-Fi) ஆக்‌ஷன் திரைப்படத்தில் இணையும் தகவல், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

அம்சங்கள்

படத்தின் முக்கிய அம்சங்கள்

'புஷ்பா' திரைப்படத்தின் மூலம் உலகளவில் புகழ் பெற்ற நடிகர் அல்லு அர்ஜுன் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அவர் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம், பிரம்மாண்டமான செலவில், அதிகளவிலான விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக உள்ளது. இது இந்திய சினிமாவுக்கு ஒரு புதிய அனுபவத்தை தரும் வகையில், இரண்டு வெவ்வேறு உலகங்களை (Parallel Universes) மையமாக கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன், மிருணாள் தாக்கூர் ஆகியோருடன், நடிகைகள் தீபிகா படுகோன், ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.