70வது தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகராக காந்தாரா படத்தின் ஹீரோ ரிஷப் ஷெட்டி தேர்வு
செய்தி முன்னோட்டம்
2022ஆம் ஆண்டிற்கான 70வது தேசிய திரைப்பட விருதுகளின் வெற்றியாளர்கள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வெற்றியாளர்களை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை புது டெல்லியில் செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டது.
இதில் சிறந்த நடிகருக்கான விருதை காந்தாரா படத்தின் நட்சத்திரம் ரிஷப் ஷெட்டி பெற்றார். மேலும், 2022இன் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக காந்தாரா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
70வது தேசிய திரைப்பட விருதுகள் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31, 2022 வரை தணிக்கை வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்களை அங்கீகரிக்கிறது.
மதிப்புமிக்க தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர் உட்பட தேசிய திரைப்பட விருது வென்ற வெற்றியாளர்கள், அக்டோபர் 2024இல் திட்டமிடப்பட்ட விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் விருது பெற உள்ளார்கள்.
ட்விட்டர் அஞ்சல்
சிறந்த நடிகராக ரிஷப் ஷெட்டி தேர்வு
#Breaking | 70வது தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகராக ரிஷப் ஷெட்டி தேர்வு! (காந்தாரா)#SunNews | #70thNationalFilmAwards | #Kanthara | #RishabShetty pic.twitter.com/orUEHa5ofD
— Sun News (@sunnewstamil) August 16, 2024
ட்விட்டர் அஞ்சல்
சிறந்த பொழுதுபோக்கு படமாக காந்தாரா தேர்வு
#Updates | 70வது தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘காந்தாரா’ தேர்வு#SunNews | #NationalFilmAwards | #Kantara | #RishabShetty pic.twitter.com/VUQSxfU3Ky
— Sun News (@sunnewstamil) August 16, 2024