ஆஸ்கார் விருது 2024: சிறந்த இசைக்கான விருது ஓப்பன்ஹெய்மரரும், சிறந்த பாடலுக்கான விருதை பார்பி திரைப்படமும் பெறுகிறது
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் நடைபெற்று வரும் 96 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில், சிறந்த பாடலுக்கான விருதை, பார்பி திரைப்படத்தில் வெளியான, "What Was I Made For?" பாடலுக்காக பில்லி எலிஷ் மற்றும் ஃபின்னியாஸ் ஓ'கானல் ஆகியோர் பெறுகின்றனர். அதேபோல, சிறந்த இசைக்கான விருதை, 'ஓப்பன்ஹெய்மர்' திரைப்படத்திற்கு இசையமைத்த லுட்விக் கோரன்சன் பெறுகிறார். முன்னதாக ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைகள் பட்டியலில் கிறிஸ்டோபர் நோலனின் பிரபலமான 'ஓப்பன்ஹெய்மர்' திரைப்படம் பல பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில், சிறந்த துணை நடிகர், சிறந்த எடிட்டிங் மற்றும் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதுகளை தற்போது வரை இந்த திரைப்படம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.