மாணவர் ஆஸ்கார் விருது: 2 இந்திய மாணவர்கள் வெற்றி
மாணவர் ஆஸ்கார் விருது போட்டியில், உலகெங்கிலும் உள்ள 738 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து 2,683 பதிவுகள் வந்தன. பரிசீலனை முடிவில் 15 மாணவர்கள் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர், இதில் இந்திய மாணவர்கள் 2 பேரும் உள்ளனர். ரிஷப் ராஜ் ஜெயின் மற்றும் அக்ஷித் குமார் ஆகிய இருவரின் படங்களும் வெற்றி பெற்றுள்ளன. இவருக்கு இந்திய சினிமா துறையினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ரிஷப் ராஜ் ஜெயின் இயக்கிய 'A Dream Called Khushi' என்ற படம், வங்கதேசத்தில் உள்ள ஒரு ரோஹிங்கியா அகதியின் கதை. இந்த இரண்டு மாணவருக்கும் பெற்ற விருதுகள், 2024 ஆஸ்கார் விருதுக்கு அனிமேஷன் குறும்படம், லைவ் ஆக்ஷன் குறும்படம் அல்லது ஆவணப்பட குறும்படம் பிரிவில் போட்டியிட தகுதியுடையவையாக இருக்கின்றன.