
"நண்பர் சசிகுமாருக்கு...": அயோத்தி படத்திற்கு ரஜினி பாராட்டு
செய்தி முன்னோட்டம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், 'அயோத்தி' திரைப்படத்தை பார்த்து, படத்தின் ஹீரோவான, இயக்குனர் சசிகுமார், படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஆகியோரை பாராட்டி உள்ளார். அவர்களை பாராட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவையும் இட்டுள்ளார். மந்திரமூர்த்தி இயக்கத்தில், சசிகுமார் நடித்த இந்த திரைப்படம், சென்ற மார்ச் மாதம், 3-ஆம் தேதி திரைக்கு வந்தது. படம் வெளியான நாள் முதல், வாசகர்கள் நேர்மறை விமர்சனங்களே படத்தின் விளம்பரம் ஆனது. படம் நல்ல வரவேற்பை மக்களிடத்தில் பெற்றது. இதனை தொடர்ந்து, சென்ற வாரம், படம், OTT தளத்தில் வெளியானது. இதை ரஜினிகாந்த் பார்த்து விட்டு, "நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம்" என பாராட்டினார்.
ட்விட்டர் அஞ்சல்
மாலிக்கை பாராட்டிய பேட்ட வேலன்
நடிகர் எனக் குறிப்பிடாமல், நண்பர் என்று சொன்னதிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் சார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக எளிய படைப்பாக வந்திருக்கும் #அயோத்தி படத்தை பார்த்துப் பாராட்டியது நல்ல படைப்புகளுக்கான பெரிய நம்பிக்கை கொடுக்கிறது மிக்க நன்றி சார் 🙏
— M.Sasikumar (@SasikumarDir) April 11, 2023
#SuperStar #PettaMalik https://t.co/GKSlupIKLQ