LOADING...
கஸ்டடி பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது; பாடலாசிரியராக அறிமுகம் ஆகும் வெங்கட் பிரபுவின் மகள்
வெங்கட் பிரபுவின் 'கஸ்டடி' படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது

கஸ்டடி பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது; பாடலாசிரியராக அறிமுகம் ஆகும் வெங்கட் பிரபுவின் மகள்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 10, 2023
07:57 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் வெங்கட் பிரபு முதல் முறையாக தெலுங்கில் களமிறங்கும் படம் 'கஸ்டடி'. இந்த படத்தின் மூலம் நாகசைதன்யா தமிழ் திரையுலகிற்கு நேரடியாக, முதன்முறையாக களமிறங்குகிறார். இந்த படத்திற்கு இசையமைத்துள்ளது, தந்தையும், தனையனும்- இளையராஜா மற்றும் அவரது மகன் யுவான்ஷாங்கர் ராஜா ஆகியோர். 'மாமனிதன்' படத்திற்கு பின்னர், இவர்கள் இருவரும் இணைந்து இசையமைத்துள்ள படம் இது. இந்த படத்தின் முதல் பாடல், இன்று (ஏப்ரல் 10) மாலை வெளியானது. 'Heads up high' என்ற இந்த பாடலை பாடியது, அருண் கௌடின்யா, அசல் கோலார் மற்றும் யுவன். இந்த பாடலில் மற்றுமொரு ஸ்பெஷல் என்னவென்றால், இந்த பாடலை எழுதியது கருணாகரன் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் மகள், ஸ்ரீ ஷிவானி ஆகும்.

ட்விட்டர் அஞ்சல்

Heads up high