LOADING...
'சம்பளமே தரவில்லை' - 'லியோ' படத்தின் நடன கலைஞர்கள் புகார் 
'சம்பளமே தரவில்லை' - 'லியோ' படத்தின் நடன கலைஞர்கள் புகார்

'சம்பளமே தரவில்லை' - 'லியோ' படத்தின் நடன கலைஞர்கள் புகார் 

எழுதியவர் Nivetha P
Oct 10, 2023
05:50 pm

செய்தி முன்னோட்டம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'லியோ'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார், அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர்அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில், வரும் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியான நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பினை இது மேலும் அதிகரித்தது. இத்தகைய எதிர்பார்ப்புகள் இருக்கும் பட்சத்தில், சில சிக்கல்களையும் இப்படம் எதிர்கொண்டு வருகிறது.

சிக்கல் 

'ஒரு நாள் சம்பளம் கூட தரவில்லை' - நடன கலைஞர்கள் 

இசை வெளியீட்டு விழா நடக்காமல் தடைபட்டது, ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்டிற்கான அனுமதி மறுக்கப்பட்டது, படத்தின் முதல் காட்சி அதிகாலையில் வெளியிடுவதில் ஏற்பட்ட சிக்கல் என பல இன்னல்களை இப்படம் சந்தித்து வருகிறது என்று தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த லியோ படத்திற்கு மேலும் ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது, இப்படத்தின் 'நான் ரெடி தான் வரவா' என்னும் பாடல் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பினை பெற்றது. அப்பாடல், 6 நாட்களுக்கு படமாக்கப்பட்ட நிலையில், 1300 நடன கலைஞர்களுக்கும், ஒருநாள் சம்பளம் கூட இதுவரை வழங்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. அதன்படி, 'அடுத்த 3 நாட்களுக்குள் சம்பளம் கொடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம்' என்று நடனக்கலைஞர்கள் தற்போது தெரிவித்துள்ளனர்.