Loading...
Zoho ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஊதிய உயர்வு இல்லை: AI செலவுகள் அதிகரிப்பால் ஸ்ரீதர் வேம்பு முடிவு
இந்த ஆண்டிற்கான ஊழியர்களின் வருடாந்திர ஊதிய உயர்வை ரத்து செய்வதாக Zoho நிறுவனர் அறிவித்துள்ளார்

Zoho ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஊதிய உயர்வு இல்லை: AI செலவுகள் அதிகரிப்பால் ஸ்ரீதர் வேம்பு முடிவு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 13, 2026
02:44 pm

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பக் கட்டமைப்புக்கான செலவுகள் பன்மடங்கு உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, சோஹோ நிறுவனம் இந்த ஆண்டிற்கான ஊழியர்களின் வருடாந்திர ஊதிய உயர்வை ரத்து செய்வதாக அதன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். X தளத்தில் ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள பதிவில்,"தரவு மையங்களுக்கு தேவைப்படும் உயர் ரக சர்வர்களின் விலைகள் ஒரே ஆண்டில் 4 மடங்கு உயர்ந்துள்ளன. மேலும் ஏஐ நினைவகத் தொழில்நுட்பக் கட்டணங்களும் பன்மடங்கு அதிகரித்துள்ளன". "Zoho நிறுவனத்தின் சேவைகளில் ஏஐ பயன்பாடு அதிகரித்து வருவதால், அதன் செயல்பாட்டுச் செலவினங்களைக் கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. உலகளாவிய மென்பொருள் சந்தையில் நிலவும் நிச்சயமற்ற நிலைமை மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக விளம்பர வரவு செலவுத் திட்டங்கள் ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளன" எனத்தெரிவித்துள்ளார்.

ஆட்குறைப்பு

ஆட்குறைப்பைத் தவிர்க்க தீவிர முயற்சி

கடந்த 18 மாதங்களாக சோஹோ நிறுவனம் புதிய ஊழியர்கள் சேர்க்கையை நிறுத்தி வைத்துள்ளது.

ஐடி துறையில் மைக்ரோசாப்ட், அமேசான், டிசிஎஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் சூழலில், சோஹோ பெரிய அளவிலான ஆட்குறைப்பை தவிர்க்க தீவிரமாக முயன்று வருகிறது.

ஊழியர்களிடம் இந்தத் தவிர்க்க முடியாத நிலைமைக்கு மன்னிப்புக் கோரியுள்ள ஸ்ரீதர் வேம்பு, அடுத்த 3 முதல் 5 ஆண்டுகள் சோஹோ நிறுவனத்தை மறுசீரமைக்கும் காலகட்டமாக இருக்கும் என்றும், இந்த இக்கட்டான சூழலைக் கடக்க அனைவரும் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT