
LinkedIn-இன் 2024ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த ஸ்டார்ட்அப்களின் பட்டியலில் Zepto முதல் இடம்
செய்தி முன்னோட்டம்
ஈ-காமர்ஸ் தளமான Zepto, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, LinkedIn Top Startups India List 2024-ல் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த தரவரிசை தொழில் வல்லுநர்கள் வேலை செய்ய விரும்பும் வளர்ந்து வரும் நிறுவனங்களின் வருடாந்திர தரவரிசை ஆகும்.
உலகளாவிய ரீதியில் 1 பில்லியனுக்கும் அதிகமான LinkedIn உறுப்பினர்களின் செயல்களின் அடிப்படையில் தரவுகளின் உள்ளீட்டை பெற்று இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இது நான்கு தூண்களின் அடிப்படையில் ஸ்டார்ட்அப்களை அளவிடுகிறது: வேலைவாய்ப்பு வளர்ச்சி, ஈடுபாடு, வேலை ஆர்வம் மற்றும் சிறந்த திறமையாளர்களின் ஈர்ப்பு.
செப்டோவைத் தொடர்ந்து ஸ்பிரிண்டோ மற்றும் கிளவுட் ஸ்டோரேஜ் மேனேஜ்மென்ட் பிளாட்ஃபார்ம் லூசிடிட்டி ஆகியவை பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Quick commerce platform @ZeptoNow, for the second consecutive year, has been ranked first in LinkedIn Top Startups India List 2024 -- an annual ranking of emerging companies where professionals want to work.
— Mint (@livemint) September 25, 2024
Read here: https://t.co/Me7O9UZUl8 pic.twitter.com/x7AlJUPzI8