
2023-ல் நிஃப்டி 50 முதலீட்டு பெருக்கத்தை எட்டாத தங்க முதலீடு
செய்தி முன்னோட்டம்
உலகளவில் பெரும்பாலான முதலீட்டாளர்களால் நம்பிக்கையாகப் பார்க்கப்படும் ஒரு முதலீடாக தங்கம் இருந்து வருகிறது. உலகளவில் எந்த விதமான பிரச்சினை ஏற்பட்டாலும், அனைத்து முதலீட்டாளர்களும் திரும்புவது தங்கத்தின் பக்கம் தான்.
ஆனால், இந்த ஆண்டு தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 50-யை விட குறைவான பெருக்கத்தையை தங்க முதலீடு அளித்திருக்கிறது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நிஃப்டி 50 இண்டக்ஸானது 8.50% வளர்ச்சி கண்டிருக்கிறது. இதனால், ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு நிஃப்டி 50 இண்டக்ஸின் வளர்ச்சியானது 18% ஆக அதிகரித்துக் காணப்படுகிறது.
ஆனால், மறுபுறம் தங்களத்தின் மீதான முதலீடோ 13% வளர்ச்சி கண்டிருக்கிறது. நிஃப்டி 50-யுடன் ஒப்பிடும் போது இது குறைவான வளர்ச்சியாகக் காணப்படுகிறது.
தங்கம்
இந்தாண்டு தங்க விலை உயர்விற்கான காரணங்கள்:
தங்கத்தின் மீதான முதலீடு நிஃப்டி 50-யை விடக் குறைவான வளர்ச்சி கண்டிருந்தாலும், பிற முதலீட்டு சாதனங்களை விட 13% என்பது சிறப்பான வளர்ச்சியாகவே பெரும்பாலான முதலீட்டாளர்களால் கருதப்படுகிறது.
அமெரிக்க வங்கிகளின் வீழ்ச்சி, உலகளவில் பல்வேறு நாடுகளுக்கிடையிலான பிரச்சினைகள் மற்றும் அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித நிலைப்பாடு ஆகியவை இந்தாண்டு தங்க விலை உயர்வுக்கான முக்கிய காரணிகளாக இருந்ததாக பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இந்தாண்டு தொடக்கத்தில் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ5,558-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அது ரூ.6,446 ஆக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.