
பிப்ரவரி 29க்குப் பிறகு உங்கள் Paytm FASTags என்னவாகும்?
செய்தி முன்னோட்டம்
Paytm Payments Bank Limitedக்கு எதிராக நேற்று RBI கடுமையான நடவடிக்கை எடுத்தது.
Paytmஇன் முக்கிய அம்சம் இந்த Paytm Payments Bank Limited.
அது நிதி கோட்பாடுகளை பின்பற்றவில்லை எனவும் இணக்கமின்மை காரணமாக அவற்றை தடை செய்ய நேர்ந்தது என ஆர்பிஐ தெரிவித்தது.
இது பற்றிய அறிக்கையில்,"பிப்ரவரி 29, 2024க்குப் பிறகு எந்தவொரு வாடிக்கையாளர் கணக்குகள், ப்ரீபெய்டு கருவிகள், வேலேட்டுகள், FASTags, NCMC கார்டுகள் போன்றவற்றில் வட்டி, கேஷ்பேக்குகள் அல்லது ரீஃபண்ட் தவிர வேறு எந்த டெபாசிட்கள், கடன் பரிவர்த்தனைகள் அல்லது டாப்-அப்கள் அனுமதிக்கப்படாது. எனினும் எந்த நேரத்திலும் வரவு வைக்கப்படும் பணத்தைத்திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்" எனத்தெரிவித்தது.
பிப்ரவரி 29க்குப் பிறகு Paytm-FASTags வேலை செய்யுமா? இதை பற்றி பலருக்கு கவலை எழுந்துள்ளது.
FASTag
பிப்ரவரி 29க்குப் பிறகு Paytm FASTags என்னவாகும்?
ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி, Paytm Wallet மூலம் பயனர்கள் தங்கள் Paytm FASTags ஐ ரீசார்ஜ் செய்யவோ அல்லது நிரப்பவோ முடியாது என்பது தெளிவாகிறது.
Paytm இன் தாய் நிறுவனமான One97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் (OCL), இன்று பங்குச் சந்தைகளுக்கு ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டது.
அதில், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை "பயனர்களின் சேமிப்புக் கணக்குகள், Wallets, FASTags மற்றும் NCMC கணக்குகளில் உள்ள டெபாசிட்களை பாதிக்காது. இருக்கும் நிலுவைகளைப் பயன்படுத்திக்கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் Paytm FASTags-ஐ எவ்வாறு செயல்பட வைப்பது என்பதை குறித்த தெளிவான விளக்கம் நிறுவனம் அளிக்கவில்லை.
Paytm இப்போது அதன் சேவைகளில் இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக வெளி வங்கிகளுடன் கூட்டு சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Paytm FASTags என்னவாகும்?
You can continue using the existing balances on your Paytm FASTag. We started our journey of working with other banks over the last two years, which we will now accelerate pic.twitter.com/clsDLVUD1N
— Paytm (@Paytm) February 1, 2024