Loading...
89 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அதிர்ச்சி! 50,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய ஃபோக்ஸ்வேகன் திட்டம்; பின்னணி என்ன?
50,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய ஃபோக்ஸ்வேகன் திட்டம்

89 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அதிர்ச்சி! 50,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய ஃபோக்ஸ்வேகன் திட்டம்; பின்னணி என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Sep 04, 2026
11:26 am

செய்தி முன்னோட்டம்

ஐரோப்பாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், சர்வதேச அளவில் நிலவும் கடுமையான போட்டிகளை எதிர்கொள்ள தனது 89 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத மிகப்பெரிய மறுசீரமைப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, உலகளவில் உள்ள தனது ஆலைகளிலிருந்து மேலும் 50,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதற்கான புதிய திட்டத்திற்கு நிறுவனத்தின் மேற்பார்வைக் குழு வியாழக்கிழமை (செப்டம்பர் 3) ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

காரணங்கள்

பணிநீக்கம் மற்றும் ஆலைகளை மூடுவதற்கான காரணங்கள்

அமெரிக்காவின் இறக்குமதி வரிகள், சீன சந்தையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை மற்றும் ஆசிய கார் உற்பத்தி நிறுவனங்களின் கடுமையான போட்டி ஆகியவற்றால் ஃபோக்ஸ்வேகன் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

ஏற்கனவே 50,000 ஊழியர்களை நீக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது மேலும் 50,000 பேரைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த பத்தாண்டுகளுக்குத் தெளிவான உற்பத்தித் திட்டங்கள் இல்லாத ஜெர்மனியில் உள்ள 4 முக்கிய ஆலைகளின் எதிர்காலம் குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

தொழிற்சங்கம்

நிர்வாகக் குழு மற்றும் தொழிற்சங்கங்களின் சம்மதம்

ஃபோக்ஸ்வேகன் தலைமை செயல் அதிகாரி ஆலிவர் புளூம் சமர்ப்பித்த இந்த எதிர்காலத் திட்டத்திற்கு பெரும்பாலான பங்குதாரர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஒப்புதல் அளித்துள்ளன.

நிறுவனத்தின் கட்டமைப்பு முறையை எளிமையாக்குவதும், முக்கிய வணிக முடிவுகளில் மேற்பார்வைக் குழுவின் தலையீட்டைக் குறைப்பதுமே இதன் முதன்மை நோக்கமாகும்.

இருப்பினும், எந்தெந்த பிராந்தியங்களில் இந்த ஆட்குறைப்பு அமல்படுத்தப்படும் என்பது குறித்த விரிவான காலக்கெடுவை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

ADVERTISEMENT

தொழில்நுட்ப மாற்றங்கள்

ஆட்டோமொபைல் துறையில் நிலவும் தொழில்நுட்ப மாற்றங்கள்

சர்வதேச அளவில் கார்களுக்கான தேவை குறைந்து வருவதும், மின்சார வாகனங்கள் சார்ந்த தொழில்நுட்ப மாற்றங்களும் இந்த முடிவுக்கு முக்கிய காரணங்களாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

தொழில்துறை வேலைவாய்ப்புகளையும் நிறுவனத்தின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள ஃபோக்ஸ்வேகன் நிர்வாகம், வரவிருக்கும் காலங்களில் வாகன மாடல்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்து, செலவுகளைக் கட்டுப்படுத்த தீவிரமாகத் திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT