Page Loader
'காத்மாண்டு-டெல்லி-ஹாங் காங்' வழித்தடத்தில் விமான சேவை வழங்கவிருக்கும் விஸ்தாரா
'காத்மாண்டு-டெல்லி-ஹாக் காங்' வழித்தடத்தில் விமான சேவை வழங்கவிருக்கும் விஸ்தாரா

'காத்மாண்டு-டெல்லி-ஹாங் காங்' வழித்தடத்தில் விமான சேவை வழங்கவிருக்கும் விஸ்தாரா

எழுதியவர் Prasanna Venkatesh
Sep 19, 2023
12:30 pm

செய்தி முன்னோட்டம்

டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களின் கூட்டு விமான சேவை வழங்கும் நிறுவனமான விஸ்தாரா, வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 'காத்மாண்டு- டெல்லி- ஹாங் காங்' வழித்தடத்தில் விமான சேவையைத் தொடங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது. முன்னதாக, இந்தாண்டு பிப்ரவரி 13ம் தேதியிலிருந்து காத்மாண்டு- டெல்லி வழித்தடத்தில் விமான சேவையைத் தொடங்கியிருந்தது விஸ்தாரா நிறுவனம். தற்போது ஹாங் காங் நாட்டிற்கும் விமான சேவையைத் தொடங்குவதன் மூலம், உலகளவில் தாங்கள் விமான சேவை வழங்கி வரும் நாடுகளின் பட்டியலில் ஹாங் காங்கையும் புதிதாகச் சேர்த்திருக்கிறது விஸ்தாரா.

விமான சேவை

எந்த விமானத்தைப் பயன்படுத்தவிருக்கிறது விஸ்தாரா? 

இருவழிச் சேவையாக, இந்த காத்மாண்டு- டெல்லி- ஹாங் காங் வழித்தட விமான சேவையை வழங்கவிருக்கிறது விஸ்தாரா. இந்த வழித்தடத்தில் A320 ரக விமானங்களைப் பயன்படுத்த சேவை வழங்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், இந்த வழித்தடத்தில் தினசரி விமானங்களை இயக்கவிருக்கிறது விஸ்தாரா. தற்போது 61 விமானங்களைக் கொண்டு விமான சேவைகளை வழங்கி வருகிறது அந்நிறுவனம். இந்த 61 விமானங்களில், 46 விமானங்கள் ஏர்பஸ் A320நியோ வகையைச் சேர்ந்தவை. மேலும், 10 ஏர்பஸ் A321 ரக விமானங்களையும், 5 போயிங் 787-9 ட்ரீம்லைனர் விமானங்களையும் வைத்திருக்கிறது விஸ்தாரா. மேலும், உலகம் முழுவதும் 30 இடங்களுக்கு தொடர்ந்து பயணிகள் விமானத்தை இயக்கி வருகிறது விஸ்தாரா நிறுவனம்.