
ஆபரண தங்கத்தின் விலை 80 ரூபாய் உயர்வு: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை அதிரடியாகக் உயர்ந்திருக்கிறது.
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,670-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.45,360-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ரூ.6,140-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.49,120 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், இன்று வெள்ளியின் விலையில் ரூ.1.20 உயர்ந்து ரூ.78.70-க்கு இன்றும் விற்பனையாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
*சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₨80 உயர்வு
— Thanthi TV (@ThanthiTV) October 21, 2023
*ஒரு கிராம் தங்கம் ₨5,670க்கும், ஒரு சவரன் ₨45,360க்கும் விற்பனை#goldprice #Chennai #Thanthitv pic.twitter.com/6hCmKhes70