ரூ.10 லட்சம் கோடி கடனிலும் அரசு திட்டங்களை எவ்வாறு செயல்படுத்தவுள்ளது என நிதியமைச்சர் விளக்கம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் கடன் சுமை கடந்த ஐந்தாண்டுகளில் இருமடங்காக உயர்ந்து ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ள நிலையிலும், நிதி நெருக்கடியை மீட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தவெக அரசு படிப்படியாக நிறைவேற்றும் என நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் உரையில் உறுதிபடத் தெரிவித்துள்ளார். அதை எப்படி செயல்படுத்தும் அரசு என்பது குறித்தும் அவர் விளக்கம் அளித்தார். அதில் ஒரு திட்டமாக, அரசுச் செலவினங்களைக் குறைக்கவும் ஊழலை முற்றிலும் ஒழிக்கவும் டெண்டர் நடைமுறைகளில் பல்வேறு வெளிப்படையான சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
டெண்டர் சீர்திருத்தங்கள்
டெண்டர் சீர்திருத்தங்கள் மற்றும் ஊழல் ஒழிப்பு
பொது டெண்டர்களில் கோரப்படும் தேவையற்ற சான்றிதழ் கட்டாயங்கள் நீக்கப்பட்டு, வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரு துறையில் பதிவு செய்த ஒப்பந்ததாரர்கள் தகுதியின் அடிப்படையில் பிற துறை டெண்டர்களிலும் பங்கேற்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.
குறைந்த மதிப்புள்ள டெண்டர் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, புதிய மற்றும் இளம் ஒப்பந்ததாரர்கள் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பு அனுமதி அதிகாரப் பகிர்வு மூலம் CMDA நிலையிலேயே விரைவாக வழங்கப்பட்டு லஞ்சம் தடுக்கப்பட்டுள்ளது.
புதிய முன்னெடுப்புகள்
வருவாய் பெருக்கும் புதிய முன்னெடுப்புகள்
மாநிலத்தின் நிதி ஆதாரங்களை அதிகரிக்கத் தகவல் தொழில்நுட்ப உதவியுடன் பல மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
மதுபான உற்பத்தியாளர்களுக்கான கூடுதல் சிறப்பு கட்டணம் மூலம் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி கூடுதல் வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஜிஎஸ்டி நேரடி தொடர்பற்ற மதிப்பீடு, கணினிமயமாக்கப்பட்ட பத்திரப் பதிவு மற்றும் சுரங்கக் கண்காணிப்பு மூலமாக ரூ.15,000 கோடி வரை கூடுதல் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் வரி மற்றும் வரி அல்லாத வருவாயை பெருக்கவும், நிதி சுயாட்சியை வலுப்படுத்தவும் ஒன்றிய திட்ட ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் 5 உறுப்பினர்கள் கொண்ட உயர்மட்ட 'வருவாய் மேம்பாட்டுக் குழு' அமைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவித்தார்.