Page Loader
2,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு திடீர் ட்ரான்ஸ்ஃபர் அறிவிப்பை வெளியிட்ட டிசிஎஸ் 
2,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு திடீர் ட்ரான்ஸ்ஃபர் அறிவிப்பை வெளியிட்ட டிசிஎஸ்

2,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு திடீர் ட்ரான்ஸ்ஃபர் அறிவிப்பை வெளியிட்ட டிசிஎஸ் 

எழுதியவர் Venkatalakshmi V
Nov 16, 2023
08:20 am

செய்தி முன்னோட்டம்

IT ஊழியர் சங்கமான Nascent Information Technology Employees Senate (NITES) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, Tata Consultancy Services (டிசிஎஸ்) தன்னுடைய பல்வேறு கிளைகளில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு இடமாற்ற அறிவிப்புகளை முன்னறிவிப்பின்றி வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து ஊழியர்கள் இந்த மின்னஞ்சல்களைப் பெறத் தொடங்கியுள்ளனர். மேலும், இந்த ட்ரான்ஸ்ஃபர் உத்தரவிற்கு இணங்கத் தவறியவர்கள், ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எதிர்கொள்வார்கள் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக Moneycontrol தெரிவிக்கிறது . டிசிஎஸ் நிறுவனம், தனது ஊழியர்களை வாரத்தில் ஐந்து நாட்களுக்கு அலுவலகத்திற்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்ட ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து, உரிய அறிவிப்பு இன்றி கட்டாய இடமாற்றம் செய்யப்படுவதாக டிசிஎஸ் நிறுவன ஊழியர்கள், NITES-யிடம் புகார் அளித்துள்ளனர்.

card 2

மத்திய அமைச்சரவையிடம் புகார் தெரிவித்துள்ள தொழிற்சங்கம் 

NITES, இதுவரை குறைந்தபட்சம் 180 ஊழியர்களிடமிருந்து புகார்களைப் பெற்றுள்ளதாக கூறுகிறது. அதில், TCS ஊழியர்களை சரியான அறிவிப்பு அல்லது ஆலோசனையின்றி இடமாற்றம் செய்ய வற்புறுத்துகிறது என்றும், இதனால் அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பெரும் சிரமம் ஏற்படுகிறது என்றும் தெரிவித்துள்ளதாக கூறுகிறது. இதனையடுத்து, நெறிமுறையற்ற பரிமாற்ற நடைமுறைகளுக்காக டிசிஎஸ் மீது நீட்ஸ் தொழிற்சங்கம், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளது. இது குறித்து பேசிய NITES தலைவர் ஹர்பிரீத் சிங் சலுஜா, "இந்த கட்டாய இடமாற்றங்கள் ஊழியர்களுக்கு ஏற்படுத்தும் நிதி நெருக்கடிகள், குடும்ப இடையூறுகள், மன அழுத்தம் மற்றும் கவலைகள் அனைத்தையும் நிறுவனம் புறக்கணிக்கிறது மேலும் அவர்களின் உரிமைகளை மீறுகிறது" என்றார்.