Swiggy உணவு டெலிவரி ஆர்டர்களுக்கான பிளாட்ஃபார்ம் கட்டணத்தை அதிகரிக்கிறது
செய்தி முன்னோட்டம்
பிரபல உணவு விநியோக சேவையான ஸ்விக்கி, அதன் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ரூ. 50% உயர்த்தியுள்ளது.
அதனால் இதுநாள் வரை ஒரு ஆர்டருக்கு ரூ.2 வரை வசூல் செய்த நிறுவனம், இனி ரூ.3 வசூலிக்கும்.
இந்த புதிய கட்டணம் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. முதல்கட்டமாக ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் தொடங்கி, படிப்படியாக இந்தியா அமலுக்கு வரவுள்ளது.
ஸ்விக்கி, கடந்த ஏப்ரல் மாதம் முதல் இயங்குதளக் கட்டணத்தை வசூலித்து வருகிறது.
அதை ரூ. 5 என நிர்ணயித்து, அதில் தள்ளுபடி செய்து, ரூ. 2 வரை வசூலித்து வந்தது. தற்போது அந்த விலைதான் உயர்த்தப்பட்டு, ரூ.3 என அதிகரித்துள்ளது.
card 2
ஸ்விக்கியின் நிதி செயல்திறன் மற்றும் லாபம்
ஸ்விக்கியின் போட்டி நிறுவனமான சோமேடோவும், தனது பிளாட்ஃபார்ம் கட்டணமாக ஒரு ஆர்டருக்கு ரூ. 2 எனவும், சில முக்கிய நகரங்களில் ரூ. 3 வசூலித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2022 ஆம் ஆண்டில், ஸ்விக்கியின் இழப்புகள் ஆண்டுக்கு ஆண்டு 80% அதிகரித்து சுமார் $540 மில்லியன் என அதன் உரிமையாளர் ப்ரோசஸ் கூறியிருந்தார்.
இருப்பினும், ஸ்விக்கியின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான, ஸ்ரீஹர்ஷாவோ, இந்த ஆண்டு மார்ச் மாதம், ஸ்விகியின் வணிகம் லாபகரமாக இருந்தது என கூறினார்.
எனவே இந்த பிளாட்ஃபார்ம் கட்டண உயர்வு, நிறுவனத்தின் நிதி செயல்திறன் மற்றும் லாபத்தை மேலும் மேம்படுத்துவதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கையாக இருக்கலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.