NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / வருவாய் வளர்ச்சி இருந்தாலும் 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஸ்விக்கியின் நஷ்டம் 8% அதிகரிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    வருவாய் வளர்ச்சி இருந்தாலும் 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஸ்விக்கியின் நஷ்டம் 8% அதிகரிப்பு
    2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஸ்விக்கியின் நஷ்டம் 8% அதிகரிப்பு

    வருவாய் வளர்ச்சி இருந்தாலும் 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஸ்விக்கியின் நஷ்டம் 8% அதிகரிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 27, 2024
    10:41 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் உணவு-தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனமான ஸ்விக்கி, 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் 8% இழப்புகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் நிறுவனத்தின் நஷ்டம் ₹564 கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ₹611 கோடியாக உயர்ந்துள்ளது.

    நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட ரெட் ஹெர்ரிங் ப்ரோஸ்பெக்டஸில் (DRHP) விவரிக்கப்பட்டுள்ளபடி, இந்த நிதி பின்னடைவு செலவுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஸ்விக்கியின் செயல்பாட்டுச் செலவுகள் ₹3,908 கோடியாக இருந்தது.

    இது முந்தைய ஆண்டின் மதிப்பான ₹3,073 கோடியிலிருந்து 27% அதிகரிப்பைக் குறிக்கிறது. இந்த நிதி சவால் இருந்தபோதிலும், அதே காலகட்டத்தில் நிறுவனம் கணிசமான வருவாய் வளர்ச்சியை அடைய முடிந்தது.

    வருவாய்

    முதல் காலாண்டில் வருவாய் அதிகரிப்பு

    நிறுவனத்தின் செயல்பாடுகளின் வருவாய் 35% அதிகரித்து, 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் ₹3,222.2 கோடியாக உயர்ந்தது.

    இது முந்தைய நிதியாண்டில் இதே காலத்தில் பதிவு செய்யப்பட்ட ₹2,389.8 கோடியை விட அதிகமாகும்.

    ஆண்டு அடிப்படையில், நிதியாண்டு 2023-24க்கான ஸ்விக்கியின் வருவாய் முந்தைய நிதியாண்டில் ₹8,265 கோடியிலிருந்து 36% அதிகரித்து ₹11,247 கோடியாக உயர்ந்துள்ளது.

    நிறுவனம் தனது இழப்பை 44% குறைத்து ₹4,179 கோடியிலிருந்து ₹2,350 கோடியாகக் குறைத்தது. இந்த முன்னேற்றம் பெரும்பாலும் செலவுகள் மீதான கடுமையான கட்டுப்பாட்டின் காரணமாக இருந்தது.

    இதற்கிடையே, நிறுவனத்தின் விரைவான வர்த்தகப் பிரிவான ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 108% குறிப்பிடத்தக்க வருவாய் வளர்ச்சியைப் பதிவுசெய்து, ₹374 கோடியை எட்டியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஸ்விக்கி
    இந்தியா
    நிதியாண்டு
    வர்த்தகம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ஸ்விக்கி

    உணவு டெலிவரி செய்து அசத்தும் மாற்றுத்திறனாளி - வைரல் வீடியோ! கர்நாடகா
    ஒரே வருடத்தில் 6 லட்சத்திற்கு இட்லி வாங்கி இருக்கும் ஹைதராபாத் ஆசாமி இந்தியா
    ஸ்விக்கி, சோமேட்டோ நிறுவனங்களை மிஞ்சும் கம்பம் 'ரீச்' உணவு டெலிவரி நிறுவனம்  தேனி
    ஐபிஎல் சீசினில் மட்டும் 12 மில்லியன் பிரியாணி ஆர்டர்கள்.. ஸ்விக்கியின் புதிய ட்வீட்! ஐபிஎல் 2023

    இந்தியா

    இந்த வார இறுதியில் ஐபிஓவுக்கான முன்மொழிவை ஸ்விக்கி தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் ஸ்விக்கி
    ரயில்வே வேலைவாய்ப்பு ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் மீது வழக்குத் தொடர குடியரசுத் தலைவர் ஒப்புதல் திரௌபதி முர்மு
    42 நாட்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்; பிறகு மீண்டும் பணிக்குத் திரும்பினர் மேற்குவங்க மருத்துவர்கள் மேற்கு வங்காளம்
    நெய்யின் தரத்தை சோதிக்க ரூ.75 லட்சத்தில் நவீன ஆய்வகம்; திருப்பதி தேவஸ்தானம் முடிவு திருப்பதி

    நிதியாண்டு

    இந்த ஆண்டு எப்போது வருமான வரி தாக்கல் செய்வது?  வருமான வரி அறிவிப்பு
    இன்று வருமான வரித் தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்? வருமான வரி விதிகள்
    கடந்த நிதியாண்டில் வைப்பு நிதிக்கான வட்டியை வழங்கத் தொடங்கிய EPFO அமைப்பு.. சரிபார்ப்பது எப்படி? வட்டி விகிதம்
    முழுக்கால பட்ஜெட்டுக்கும், இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடருக்கும் என்ன வித்தியாசம்? நாடாளுமன்றம்

    வர்த்தகம்

    இந்திய மசாலாப் பொருட்களின் வரலாறு இந்தியா
    ரூ.400 கோடி முதலீட்டில் தமிழகத்தில் தங்களது சேவையை விரிவுபடுத்துகிறது மேக்சிவிஷன் தமிழ்நாடு
    இந்தியா-கனடா: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஏன் மோசமடைந்தன? கனடா
    "கனடா விசாரணையை முடிக்க இந்தியா ஆதாரம் கேட்கிறது" - கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025